பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

உரைத்த வுறுப்பொடு தாழிசைப் பின்னர் நிரைத்த வடியா னீர்த்திரை போல வசையடி பெறினவை யம்போ தரங்கம்.

225

55

குறில்வயி னிரையசை கூட்டிய வாரா தடியவட் பெறினே வண்ணக மாகும்.

56

கலியொடு கொண்டு தன்றளை விரவா விறுமடி வரினே வெண்கலி யாகும். தரவே யாகியு மிரட்டியுந் தாழிசைச் சிலவும் பலவு மயங்கியும் பாவே

றொத்தா ழிசைக்கலிக் கொவ்வா வுறுப்பின கொச்சகக் கலிப்பா வாகு மென்ப.

ஈற்றடி மிக்கள வொத்தன வாகிப்

பலவுஞ் சிலவு மடியாய் வரினே

57

58

கலிப்பா வினத்துத் தாழிசை யாகும்.

ஐஞ்சீர் நான்கடி கலித்துறை யாகும்.

நாற்சீர் நாலடி வருவ தாயி

னொலியி னியைந்த கலிவிருத் தம்மே.

தூங்க லிசையாய்த் தனிச்சொற் சுரிதகந் தான்பெறு மடிதளை தழீஇவரை வின்றா யெஞ்சா வகையது வஞ்சிப் பாவே.

இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது வஞ்சித் தாழிசை தனிவரிற் றுறையே.

ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு மிக்கடி வரினு மப்பாற் படுமே.

59

60

61

62

63

64

(யாப்பருங்கலம், செய்யுளியல் உரை மேற்கோள்)

66

'தனியே

யடிமுதற் பொருள்பெற வருவது தனிசொலஃ

திறுதியும் வஞ்சியு மென்ப.

65