பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

"நிரனிறை, சுண்ணம், அடிமறி மொழிமாற்று, அடிமொழி மாற்று என்னும் இந் நான்கினோடும் பூட்டுவில், புனல்யாறு, தாப்பிசை, அளைமறி பாப்பு, கொண்டுகூட்டு இவ்வைந்தும் உறழ இருபதாம். அவை வந்த வழிக் கண்டுகொள்க. இருபது வகையானுங் காட்டினார் அவிநயனார் எனக் கொள்க.”

66

அவிநயனார் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்ற இந்நான்கினையும்; 6

குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம, மெல்லெழுத்து வண்ணம், இடை யெழுத்து வண்ணம் என்று இவ்வைந்தினையும் கூட்டி யுறழ நூறு வண்ணம் பிறக்கும் என்றார்.'

66

'தனியே

யடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலஃ திறுதியும் வஞ்சியு ளியலு மென்ப

66

எழுத்தல் கிளவியி னசையொடு சீர்நிறைத்

தொழுக்கலு மடிதொடை தளையழி யாமை

வழுக்கில் வகையுளி சேர்தலு முரித்தே.

67

நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும்

பாவொடு பிறவு மாகு மொரோவழி.

68

உயிரள பெடையுங் குறுகிய உயிரி

னிகர வுகரமுந் தளைதபி னொற்றாம்

சீர்தப வரினு மொற்றியற் றாகும்.

66

69

“இனி, ஒரு சாரார் அகத்திணை, புறத்திணை, அகப்புறத் திணை

என மூன்றா யடங்குமென்ப. ஆமாறு அவிநயத்துட் காண்க

"முற்செய் வினையது முறையா வுண்மையி

னொத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து

காட்சி யையந் தெரித றேற்றலென

நான்கிறந் தவட்கு நாணு மடனும்

அச்சமும் பயிர்ப்பு மவற்கு

முயிர்த்தகத் தடக்கிய

வறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமு