பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

5. அவிநய உரை

அவிநயனார் இயற்றிய அவிநயம் என்னும் நூலுக்கு ஒர் உரை இருந்தது என்றும், அதனை இயற்றியவர் தண்டலங்கிழவன் என்னும் இராசபவித்திரப் பல்லவதரையன் என்றும் மயிலைநாதர் என்னும் உரையாசிரியர் கூறுகிறார்.

நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதர் (நன்., பொது வியல், 9ஆவது சூத்திர உரையில்) பத்து வகையான எச்சங்களை விளக்குகிறார். அவை பெயரெச்சம், வினையெச்சம், உம்மையெச்சம், சொல்லெச்சம், பிரிநிலையெச்சம், எனவெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறை, எச்சம், இசையெச்சம், குறிப்பெச்சம் என்பன. இவற்றை விளக்கிய பின்னர் மயிலைநாதர்.

66

'இந்தப் பத்தெச்சமும்

புவிபுகழ் புலமை யவிநய நூலுட் டண்டலங் கிழவன் றகைவரு நேமி யெண்டிசை நிறைபெய ரிராச பவித்திரப் பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக

என்று கூறுகிறார்.

99

இதனால், தண்டலம் என்னும் ஊரின் தலைவனாகிய இராச பவித் திரப் பல்லவதரையன் என்பவர் அவிநய நூலுக்கு உரை எழுதினார் என்பது நன்கு தெரிகிறது. இவ்வுரையும் இப்போது மறைந்துவிட்டது.

6. இன்மணியாரம்

இது செய்யுளிலக்கண நூல். இந்நூலைப் பற்றியும் இந்நூலாசி யரைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. யாப்பருங்கலம், ஒழிபியல், 'மாலைமாற்றே' எனத் தொடங்கும் சூத்திரப்பாவுரையில், உரையா சிரியர் குணசாகரர் இந்நூலிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டியுள்ளார். அச்சூத்திரம், இது:

"இனிச் செய்யுளாவன:

'வரியே குரவை மதலை மேட

முரியே தாழிசை முன்னிலை வாழ்த்தே

தேவபாணி சிற்றிசை நேரிசை

பாவை தனிநிலை பாங்கமை மடலே'