பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

231

என்றோதப்பட்டன. இவை இன்மணியாரத்துள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.

7. நாலடி நாற்பது என்னும் அவிநயப் புறனடை

அவிநயம் என்னும் நூலுக்கு அவிநயப் புறனடை என்னும் பெயருள்ள சார்பு நூல் இருந்தது என்பது மயிலைநாதர் என்னும் உரை யாசிரியரும், யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் எழுதுவதி லிருந்து தெரிகிறது. அவிநயப் புறனடைக்கு நாலடி நாற்பது என்னும் பெயரும் உண்டு.

66

யாப்பருங்கலம் என்னும் நூலை இயற்றிய ஆசிரியரே யாப்பருங் கலக்காரிகை என்னும் ஒரு சார்பு நூலை இயற்றியுள்ளார். அதற்கு யாப் பருங்கலப் புறனடை என்பது பெயர். யாப்பருங்கல விருத்தியுரைகாரர், தமது உரையில் யாப்பருங்கலக் காரிகைச் செய்யுளை மேற்கோள் காட்டி, இவ் வியாப்பருங்கலப் புறனடையை விரித்துரைத்துக் கொள்க என்று எழுதுவதிலிருந்து இதனை அறியலாம். இதனால் யாப்பருங் கலத்துக்கு யாப்பருங் கலக்காரிகை புறனடை நூல் என்பது தெரிகிறது. இதுபோலவே அவிநய நூலுக்கு 'அவிநயப் புறனடை' என்னும் சார்பு நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது.

அவிநயப் புறனடையையும் அவிநயனாரே இயற்றினார். அது நாற்பது வெண்பாவினால் அமைந்த நூலாகையினாலே அதற்கு 'நாலடி நாற்பது' என்னும் பெயரும் வழங்கியது. (நானூறு வெண்பாக்களினால் அமைந்த நூலுக்கு நாலடி நானூறு என்று பெயர் வழங்கப்படுவது நினைவுகொள்ளத்தக்கது.) “அவிநயனார் யாப்பிற்கு நாலடி நாற்பது" என்று யாப்பருங்கலக்காரிகை யுரைப் பாயிரத்தில் குணசாகரர் எழுதுவது காண்க.

யாப்பருங்கல உரையாசிரியர், அவிநயப் புறனடை என்னும் நூலைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

66

'அவிநயத்துள்ளும்,

'முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கின்

வன்மை முதலா மும்மையும் பிறக்கும்'

எனப் பொதுவகையாற் கூறி இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று கணக்கியலுட் புறனடை எடுத்தோதினார் அவிநயனாராகலானும்

---