பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

6

உரைப்போர் குறிப்பி னுணர்வகை யன்றி யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே.

245

46

அடித்தொகை நான்குபெற் றந்தத் தொடைமேற்

கிடப்பது நாற்சீர்க் கிழமைய தாகி

யெடுத்துரை பெற்ற விருநெடி லீற்றின்

அடிப்பெறி னாசிரி யத்துறை யாகும்.

47

அளவடி யைஞ்சீர் நெடிலடி தம்மு ளுறழத் தோன்றி யொத்த தொடையாய் விளைவது மப்பெயர் வேண்டப் படுமே. அறுசீர் முதலா நெடியவை யெல்லா

நெறிவயிற் றிரியா நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா வினத்துள விருத்தம்.

48

49

வகுத்த வுறுப்பின் வழுவுத லின்றி யெடுத்துயர் துள்ள லிசையன வாகல்

கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே.

50

வெண்கலி யொத்தா ழிசைக்கலி கொச்சக மென்றொரு மூன்றே கலியென மொழிப.

51

தரவே தாழிசை தனிநிலை சுரிதக மெனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி.

52

தன்னுடை யந்தமுந் தாழிசை யாதியுந்

துன்னு மிடத்துத் துணிந்தது போலிசை

தன்னொடு நிற்ற றரவிற் கியல்பே.

53

தத்தமி லொத்துத் தரவி னகப்பட

நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை.

54

ஆங்கென் கிளவி யடையாத் தொடைபட நீங்கி யிசைக்கு நிலையது தனிச்சொல்.

55

ஆசிரியம் வெண்பா வெனவிவை தம்முள்

ஒன்றாகி யடிபெற் றிறுதி வருவது

சுழிய மென்பெயர் சுரிதக மாகும்.

56