பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

259

ஏழெழுத்து முதலா ஒன்பதெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடி என்றும், பத்தெழுத்து முதலாப் பதினான்கெழுத்தின்காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடி என்றும், பதினைந்து முதலாப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடி என்றும், பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடி என்றும் வேண்டுவர்."

(யாப்பருங்கலக்காரிகை, சூத், 43, குணசாகரர் உரை.) இந்நூலைப் பற்றியும் இந்நூலாசிரியரைப் பற்றியும் வேறு ஒன்றும் தெரியவில்லை.

18. செய்யுள் வகைமை

இப்பெயருடைய நூல் ஒன்று இருந்ததென்பது, நவநீதப் பாட்டியலின் பழைய உரையாசிரியர் கூறுவதிலிருந்து தெரிகிறது. இந் நூலிலிருந்து சில செய்யுள்களை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இந்நூல் யாரால், எக்காலத்தில் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. செய்யுள் வகைமை என்னும் பெயரைச் செய்யுள் வகை என்றும் உரையாசிரியர் சில இடங்களில் குறிக்கிறார். இந்நூலி லிருந்து இவர் மேற்கோள் காட்டியுள்ள செய்யுள்கள் வருமாறு:

“ஈரெண் கலையினும் இயன்ற வண்ணமும்

ஆசிரிய விருத்தமு மாதி யானவிச்

சுற்றத் தளவாய்த் தோன்றும் பாட்டுச்

சொற்றரப் பெறினைம் பானிற் சுருங்காது சிற்றில் சிறுபறை சிறுதே ருருட்டல்

மற்ற மூன்றும் மிகாது நிற்கும்.

1

66

ஏனைய வரையறை யைம்பது திருந்தி வருத லாகா தென்பது புலவர்

2

(நவநீதம், 30ஆம் செய்யுளுரை மேற்கோள்)

66

எடுத்துரை யாகும்... ...

அன்னவன் றன்னைச் சாற்றிடனு மறையவர் முன்ன ரிடைநிலைப் பாட்டினு மொழிவர் சொன்ன கடவுட் டொழுதகப் பாவில்.

3

(நவநீதம், 32ஆம் செய்யுளுரை மேற்கோள்)