பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

அது:

269

““விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்' என்றார் பரிமாணனார்

என்பது.

27. பல்காப்பியம்

பல்காப்பியனார் இயற்றிய பல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்ததென்பது பேராசிரியர் உரையினால் தெரிகிறது. பல் காப்பியம், தொல்காப்பியத்தின் வழி நூல். இது செய்யுளிலக்கணத்தை மட்டும் கூறுவது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

தொல். பொருள்., மரபு., “வழியெனப் படுவது அதன் வழித் தாகும்' என்னும் சூத்திர உரையில் பேராசிரியர் இந்நூலைப் பற்றி எழுதுவது வருமாறு:

"மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ வெனின், அவை அ வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றினவென்பது. என்னை? 'கூறிய குன்றினு முதனூல் கூட்டித்

தோமின் றுணர்ந்த றொல்காப் பியன்ற

னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே.’

என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர், பல்காயனார் முதலாயி னாரை அவ்வாறு கூறாராகலானு மென்பது. என்றார்க்குத் தொல்காப்பி யங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல் செய்த தெற்றுக் கெனின்: அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளு மெல்லாஞ் செய்திலர். செய்யுளிலக்கணம் அகத்தியத்துட் பரந்து கிடந்த தனை இவ்வாசிரியர் (தொல்காப்பியர்) சுருங்கச் செய்தலின் அருமை நோக்கிப் பகுத்துக் கூறினாராகலானும். அவர் தந்திரத்துக் கேற்ப முதனூலோடு பொருந்த நூல் செய்தராகாலானும் அமையுமென்பது.

பல்காப்பியர் சூத்திரங்களுள் ஒன்றேனும் கிடைக்கவில்லை.

28. பல்காப்பியப் புறனடை

وو

பல்காப்பியனார் இயற்றிய பல்காப்பியம் என்னும் நூலுக்குப் பல் காப்பியப் புறனடை என்னும் சார்புநூல் ஒன்று இருந்ததென்பது பேராசிரியர் உரையினால் தெரிகிறது. பல்காப்பியப் புறனடையைப் பல்காப்பியனாரே இயற்றியிருக்க வேண்டும் என்று கருதலாம்.