பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

34.புணர்ப்பாவை. 35.போக்கியம்.

36.கிரணியம். 37. வதுவிச்சை

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூல்களைக் குறிப்பிடு கிறார். யாப்பருங்கலம், ஒழிபியலில் சித்திரக் கவிகளைப் பற்றிக் கூறுகிற இடத்தில் இந்நூல்களைக் கூறுகிறார். உரையாசிரியர் எழுதுவது இது :

“இதனுட் சக்கரம் என்றதனானே பூமி சக்கரமும், ஆகாயச் சக்கர மும், பூமியாகாயச் சக்கரமும், வட்டச் சக்கரமும், புருடச் சக்கரமும், சதுரச் சக்கரமும், கூர்மச் சக்கரமும், மந்தரச் சக்கரமும், காடகச் சக்கர மும், சனிபுருடச் சக்கரமும், சலாபச் சக்கரமும் முதலாக வுடையன புணர்ப்பாவையுள்ளும் போக்கியத்துள்ளும் கிரணியத்துள்ளும் வது விச்சையுள்ளும் கண்டுகொள்க.”

இதனால் இப்பெயருள்ள நூல்கள் இருந்தன என்பதும், இவை சித்திரக்கவியைச் சேர்ந்தவை என்பதும் தெரிகின்றன. இவற்றை இயற்றியவர் யாவர் என்பதும், இவை எக்காலத்தில் இயற்றப்பட்டன என்பதும் தெரியவில்லை.

38. பெரிய பம்மம்

பெரிய பம்மம் என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. எழுத்தோத்து, 2-ஆம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், பெரிய பம்மச்சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது இது:

66

"உயிருறுப் புயிர்மெய் தனிநிலை யெனாஅக்

குறினெடி லளபெடை மூவின மெனாஅ

அஃகிய நாலுயிர் மஃகான் குறுக்கமோடு

ஐந்துதலை யிட்ட ஐயீ ரெழுத்து

அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென

வசையறு புலவர் வகுத்துரைத்தனரே.

இது பெரிய பம்மம்.”

இந்தப் பெரிய பம்மத்தைப் பற்றி வேறு செய்திகள் தெரிய

வில்லை.