பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - 1

பெயர் தெரியாத நூல்கள்

இதுகாறும் மறைந்துபோன நூல்களைப் பற்றி ஆராய்ந்தோம். மறைந்துபோன நூல்களில் சிலவற்றின் பெயர்களும் மறைந்து போயின. உரையாசிரியர்களில் சிலர், தங்கள் உரையில் சில செய்யுட் களையும் சூத்திரங்களையும் மேற்கோள்காட்டி அவை இன்ன நூலைச் சேர்ந்தவை என்று கூறாமலே விட்டனர். அந்தச் செய்யுட்களும் சூத்திரங் களும் எந்த நூலைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. இங்கு அந்தச் செய்யுட்களையும் சூத்திரங்களையும் தொகுத்துக் கூறுகிறோம்.

-

அடியார்க்கு நல்லார் ஏன்னும் உரையாசிரியர், தாம் சிலப்பதிகாரக் காவியத்துக்கு எழுதிய உரையில் கீழ்க்கண்ட சூத்திரங்களைப் பரத நாட்டியத்திற்கு உரிய கைகளை (முத்திரைகளை) கூறுகிறார். இச்சூத்திரங்கள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரியவில்லை.

கைதான் இரண்டு வகைப்படும்: இணையாவினைக்கையும், இணைக்கையுமென. இவை ஒற்றைக்கை இரட்டைக்கை யென்றும் வழங்கப்படும்.

மெய்பெறத் தெரிந்து மேலோ ராய்ந்த கைவகை தன்னைக் கருதுங் காலை

யிணையா வினைக்கை இணைக்கை யென்ன

வணைய மென்ப வறிந்திசி னோரோ.

'இணையா தியல்வ தினையா வினைக்கை இணைந்துடன் வருவ திணைக்கை யாகும்.’ இணையாவினைக்கை 33 வகை.

இணையா வினைக்கை யியம்புங் காலை யணைவுறு பதாகை திரிபதா கையே கத்தரிகை தூப மராள மிளம்பிறை

சுகதுண் டம்மே முட்டி கடகஞ்

சூசி பதும கோசிகந் துணித்த

1

2