பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

319

முல்லைத் திணையில் 2 முதல் 11 ஆம் செய்யுள்வரையில் 10 செய்யுள் களும் காணப்படவில்லை.

திணைமொழி ஐம்பது:

பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார் என்பவர். இதில் முதல் செய்யுளின் முதல் இரண்டு அடிகள் மறைந்துவிட்டன.

திருவீங்கோய்மலை எழுபது:

பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை, இயற்றியவர் நக்கீரதேவநாயனார் என்னும் சிவனடியார், இவர் சங்ககாலத்து நக்கீரர் அல்லர். இந்நூலில் உள்ள 70 செய்யுள்களில் 48 முதல் 61 வரையில் உள்ள 13 செய்யுள்கள் மறைந்துவிட்டன.

தேவாரம்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூன்று சைவ அடியார்கள் பாடி யருளிய தேவாரப் பதிகங்களில் பெருபான்மைப் பதிகங்கள் மறைந்து விட்டன. அவை, தில்லைச் சிற்றம்பலத்தில் ஓர் அறையில் வைத்துப் பூட்டப் பட்டிருந்தன. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திறந்து பார்த்தபோது, சிதல் அரித்துப் பல ஏடுகள் மறைந்து கிடந்தன. மிகுந்தவை சிலவே. அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர் நாற்பத்தொன்பதி னாயிரம் திருப்பதிகங்கள் பாடினார் என்ப.

66

'குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைக்

கொடுங்கூற்றா யினவென்ன வெடுத்துக் கோதில

ஒருமானைத் தரிக்குமொரு வரையுங் காறும்

ஒருநாற்பத் தொன்பதினா யிரம தாகப்

பாடினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. கூந்தர மூர்த்தி சுவாமிகளும் தமது தேவாரத்தில், திருநாவுக்கரசர் 49 ஆயிரம் பதிகங்கள் பாடினார் என்று கூறுகிறார்.

"இணைகொளேழேழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திரு நாவினுக்கரையன்” என்று திருநின்றியூர்ப் பதிகத்தில் கூறுகிறார். அவர் பாடிய 49,000 பதிகங்களில் செல்லரித்தவை போக இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்றேழு பதிகங்கள்தாம்.

திருஞானசம்பந்தர் பாடியவை பதினாறாயிரம் பதிகங்கள்.