பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

37

கூறவில்லை என்றாலும். குமாரசேனாசிரியர் கோவையைச் சேர்ந்தது இந்தச் செய்யுள் என்று கருதப்படுகிறது.

குமாரசேனாசிரியர் கோவையைப் பற்றி வேறு ஒரு செய்தியும்

தெரியவில்லை.

17. கோயிலந்தாதி

களவியற் காரிகை உரையாசிரியர், கோயிலந்தாதி என்னும் நூலிலிருந்து நான்கு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். கோயில் என்பது, திருவரங்கம் பெரியகோயில் எனப்படுகிற ஸ்ரீரங்கம். திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்காநாதர்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பட்ட அந்தாதி நூல் இது என்பது தெரிகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து, களவியற் காரிகை உரையாசிரியர் நான்கு செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த நான்கு செய்யுள்களில் இரண்டு செய்யுள்கள் செல்லரித்துச் சிதைந்து காணப்படுகிறபடியால், அவற்றை நீக்கி, மற்ற இரண்டு செய்யுள்களைக் காட்டுவோம்.

பிறவா ரணங்கு மணிக்குநை யார்கழல் பேணினரென் றறைவா ரணங்க ளரற்று மரங்க ரருளிலர்போன் மறவா ரணங்கள் மடங்கலுக் கோடும் வழிபழிவந் துறவா ரணங்கின் பொருட்டுர வோய்வர லோங்கிருளே.

6

சேர்ந்தசங் கத்த சிறுநுதற் காகச்செவ் வேள்முருகற் கீர்ந்தசங் கத்தையிட் டாலென் பயன்கட் டிலங்கைச்செந்தீக் கூர்ந்தசங் கத்துவிற் கோலிய கொற்றவன் வெற்றிச்செங்கை யார்ந்தசங் கத்தரங்கன் றிருத்தார்கொண் டணிமின்களே.

18. சிற்றெட்டகம்

1

2

இப்பெயருடைய ஒரு நூல் இருந்ததென்பது களவியற் காரிகை உரையினால் தெரிகிறது. இந்நூற் செய்யுள்கள் சிலவற்றைக் களவியற் காரிகை உரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்நூலைப் பற்றிக் களவியற் காரிகைப் பதிப்யாசிரியர் எழுதும் குறிப்பு கருதத்தக்கது. அக்குறிப்பு இது:

"இவ் வரியவுரையுள் மேற்கோளாக வந்துள்ள நூல்களுள் ஒன்று இதுகாறும் மயக்கத்திற்கேதுவாய்க் கிடந்த நூற்பெயரொன்றினைத் தெளிய