பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற்

போந்துகண் டாளென்று போந்ததென்

மாட்டோர் புறனுரையே.

99

43

இதே செய்யுளை யாப்பருங்கலம், தொடையோத்து 53ஆம் சூத்திர உரையிலும் மேற்கோள் காட்டுகிறார். இச்செய்யுள் இன்ன நூலைச் சேர்ந்தது என்பதை இவர் குறிப்பிட வில்லையாயினும், இது தமிழ் முத்தரையர் கோவையைச் சேர்ந்த செய்யுள் என்று கருதப்படுகிறது.

தமிழ் முத்தரையர் கோவை இப்போது கிடைக்கவில்லை யாகையினால், இது மறைந்துபோன தமிழ் நூல்களிலே ஒன்றாகும். இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

20. திருவதிகைக் கலம்பகம்

இந்தக் கலம்பகம், திருவதிகை வீரட்டானேசுவரர் பேரில் பாடப் பட்டது. திருவதிகை, தென்ஆர்க்காடுமாவட்டம், கூடலுர்த் தாலுகாவில் உள்ளது. திருவதிகைக் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று இந்நூலையும் இந்நூலாசிரியரையும் கூறுகிறது. இந்தச் சாசனம் சக ஆண்டு 1458, துன்முகி, ஆடி 10ஆம் நாள் எழுதப்பட்டது. அதாவது, கி.பி. 1536இல் இது எழுதப்பட்டது. உத்தர மேரூரில் மகிபால குலசேரி என்னும் தெருவில் வாழ்ந்துவந்த உத்தண்ட வேலாயுத பாரதி என்பவர் இந்நூலை இயற்றினார் என்று இச்சாசனம் கூறுகிறது. தொண்டை மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து ராஜேந்திரசோழ சதுர்வேதி மங்கலம் என்னும் உத்தரமேரூர் என்று இந்தச் சாசனம் இவர் ஊரைக் கூறுகிறது. மேலும், கௌண்டன்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப சூத்திரத்து வீரவல்லி தேவராச பட்டர் காசிநாத குப்பையன் என்னும் உத்தண்ட வேலாயுத பாரதி என்றும் இவர் பெயரைக் கூறுகிறது.

இந்தக் கலம்பகம் பாடியதற்காக 2 மா நன்செய் நிலமும், 1மா புன் செய் நிலமும், திருவதிகை நகரத்துக் கோட்டைக்குள் இருந்த அக்கிர காரத்தில் ஒரு வீடும் இந்தப் புலவருக்குத்தானம் செய்யப்பட்டன. (376 of 1921., Annual Report of Epigraphy, Madras, 1922, page 99.)