பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அம்பல் பெருகி யலரான தல்லிதொறுந்

தும்பி முரலுஞ் சுரிகூந்தற்

கொம்பனைய

பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும்

அண்ணறான் செய்யு மருள்.

32

கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம் - மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம்.

33

தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தரையுந் தூய பெருவனமுஞ் சோலையுமா - மாய கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின்.

34

கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் வேல னயரும் வெளியாட்டுச் - சால

மடவார் மயின்முருக னன்றியே யண்ணல் தடமார்பு முண்ணுமோ தான்.

35

தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ

ராய வவர்வரவு மன்றாயின் - மேயசீ

ரேலார்பூ வட்ட முறையிடவும் போதாது

வேலா முலைக்கு விலை.

36

வஞ்சி யிடைமடவாய் வல்வினையே னுண்கண்ணு நெஞ்சு மகலாது நிற்றலாற் செஞ்சுரும்பு

பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைசூழ் நன்னாடன்

றண்ணளிக்கு முண்டோ தவறு.

37

அன்ன நடைமடவா யாற்றி யமைவார்

சொன்ன வரிய சுரங்கடந்தோ - முன்னமரர்

தங்களூர் போலத் தனியே வடகொங்கிற் றிங்களூர் தோன்றுஞ் சிறந்து.

38

எங்களூ ரிவ்வூ ரிதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர் வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானு மொருதுணையா நாளைப்போ கும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து.

39