பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆசிரியமாலை

இலக்கிய நூல்கள்

II. புறப்பொருள்

இப்பெயருள்ள நூல் ஒன்றிருந்ததென்று புறத்திரட்டினால் தெரிகிறது. ஆசிரியமாலையிலிருந்து பதினேழு செய்யுள்கள் புறத் திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியமாலை என்னும் பெயரி லிருந்து, இந்நூற் செய்யுள்கள் ஆசிரியப்பாவினால் அமையப்பெற்றன என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. ஆசிரியமாலை ஒரு தொகை நூல்.

உரையாசிரியர் இளம்பூராண அடிகள், தொல்காப்பிய உரையில், இந்நூலிலிருந்து, "குடிபிறப் புடுத்துப் பனுவல்சூடி” எனத் தொடங்கும் செய்யுளை மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால், அச்செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்பதைக் கூறவில்லை. புறத்திரட்டிலிருந்து, அச் செய்யுள் ஆசிரியமாலையைச் சேர்ந்ததென்பது தெரிகிறது. ஆசிரிய மாலை புறப்பொருளைக் கூறும் நூல் எனத் தோன்றுகிறது.

பழைய இராமாயணத்தைச் சேர்ந்த ஐந்து செய்யுள்கள் ஆசிரிய மாலையில் காணப்படுகின்றன. அச்செய்யுள்களை, இந்நூலில், 'பழைய இராமாயணம்' என்னும் தலைப்பின்கீழ்க் காண்க. ஆசிரியமாலையின் ஏனைய செய்யுள்களைக் கீழே காண்க:

மூவிலை நெடுவே லாதி வானவன்

இடமருங் கொளிக்கும் மிமையக் கிழவி தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர் மிகைப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின் வாள்பிடித் தாளி யேறித் தானவன் மாளக் கடும்போர் கடந்த குமரி

மூவா மெல்லடித் திருநிழல்

வாழி காக்கவிம் மலர்தலை யுலகே.

1