பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

63

ஏனையோர்மேலும் யானை சேறலும் களிற்றின்மேலும் தேரின்மேலும் குதிரை சேறலும், தன்மேலிருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவுமாம்.... இவை தனித்து வாராது தொடர் நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க.

66

(தொல். பொருள். புறத்திணையியல்,

தானை யானை குதிரை என்ற” என்னும் சூத்திர உரை) தக்கயாகப் பரணி உரையாசிரியர் (பேய்களைப் பாடியது, 12ஆம் தாழிசை), “மதிதுரந்து வரவொழிந்த” என்னும் தாழிசைக்கு உரை எழுதி, 'இது தர்க்கவாதம். இது தமிழில் தகடூர் யாத்திரையிலும் உண்டு” என்று விளக்கம் கூறுகிறார்.

66

இவற்றிலிருந்து தகடூர் யாத்திரை என்னும் ஒரு நூல் உண்டு என்பது தெரிகிறது. தகடூர் யாத்திரையிலிருந்து 44 செய்யுள்கள் ‘புறத் திரட்டு' என்னும் தொகைநூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புறத்திரட்டில் தொகுக்கப்படாத ஒரு செய்யுளைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவை தவிர வேறு மூன்று செய்யுள்களை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் மேற்கோள் காட்டு கிறார். இந்த மூன்று செய்யுள்களும் எந்த நூலைச் சேர்ந்தவை என்று இவர் குறிப்பிடவில்லை. ஆயினும், இவை மூன்றும், சில குறிப்புகளைக் கொண்டு தகடூர் யாத்திரைச் செய்யுள்களே என்று ஐயமின்றித் தெரிகின்றன.

தகடூர் யாத்திரை என்னும் நூலுக்குத் தகடூர் மாலை என்னும் வேறு பெயரும் உண்டு. இது உரைநடையும் செய்யுள் நடையும் விரவிச் செய்யப்பட்டது.

பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரநாட்டரசன், தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன்மேல் பகை கொண்டு, படையெடுத்துச் சென்று, தகடூரை முற்றுகையிட்டுப் போர் செய்து வென்றான். இதனால் இவன் சேரமான் தகடூர் எறித்த பெருஞ் சேரல் இரும்பொறை என்று பெயர்பெற்றான். பதிற்றுப்பத்து, 8ஆம் பத்து இவனைச் சிறப்பித்துக் கூறுகிறது. தகடூரில் நடந்த போர்ச்செய்தியை விளக்கமாகக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நூல்.

சேலம் மாவட்டம் தர்மபுரி தாலுகாவின் தலைநகரமாக இருக்கும் தர்மபுரியே பழைய தகடூர். தகடூர் என்னும் பழைய பெயர் மாறி இப்போது தர்மபுரி என்று வழங்குகிறது.