பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனத்தைக் கவர்ந்ததும், உணர்ச்சியூட்டியதும் ஆகிய தகடூர்ப் போர் - இது. முடியுடை வேந்தர் மூவரும், குறுநில மன்னர்களும் பங்குகொண்டு நிகழ்த்திய பெரும்போர் என்பதை மறத்தல் ஆகாது - அந்நிகழ்ச்சி நடந்த பல காலத்துக்குப் பிறகு, அது பழங்கதையாய்ப் போனபிறகு, தகடூர் யாத்திரை என்னும் நூலாக எழுதப்பட்டது என்று கூறுவது, உலக இயற்கைக்கும் பழந்தமிழர் மரபுக்கும் பொருந்துவது அன்று.2

2

புறநானூற்றில் கூறப்படும் வீரச்செய்திகள் எல்லாம், அவை நிகழ்ந்த அதே காலத்தில், புலவர்களால் நேரிற் கண்டு பாடப்பட்டவை அல்லவோ? அது போன்றே, தகடூர் யாத்திரை என்னும் நூல், அப்போர் நிகழ்ந்த காலத்திலேயே கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே - எழுதப்பட்ட நூல் என்பது அதன் அகச்சான்றினால் தெரிகின்றது.

அக்காலத்து வழக்கப்படி, தகடூர்ப் போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீரச்செயல்களையும் ஏனைய செயல்களையும் புலவர்கள் செய்யுளாகப் பாடினார்கள். பிறகு, அப்பாடல்களைத் தொகுத்து, இடை யிடையே விளக்கம் எழுதி, தகடூர் யாத்திரை என்னும் பெயருடன் நூலாக அமைத்தார்கள் என்று கருதுவது தவறாகாது.

தமிழ்நாட்டிலே, தகடூர் யாத்திரை நூல் பல நூற்றாண்டுகளாக வழங்கி வந்தது. சென்ற 19ஆம் நூற்றாண்டுவரையில் ஏட்டுச்சுவடியாக இருந்த தகடூர் யாத்திரை, அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மறைந்து விட்டது. சங்க நூல்களை அச்சிடுவதற்காக ஏட்டுச்சுவடிகளைத் தேடிய டாக்டர் உ வே. சாமிநாத ஐயர், திருநெல்வேலி, தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் சென்று ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்த்தபோது, தகடூர் யாத்திரை என்னும் ஏட்டுச்சுவடியைப் பற்றிய குறிப்பு அவருக்குக் கிடைத்தது. இது பற்றி அவர் தமது வரலாற்றில் இவ்வாறு எழுதுகிறார்:

66

'அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், 'நாங்குனேரியி லிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்” என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகிறது. ஆதலால், அது பழைய நூலென்று உணர்ந்தேன்" என்றும்,

“பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த