பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

/67

உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல அந்த அருமை யான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்”

என்றும் ஐயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.3

3

இதிலிருந்து தகடூர் யாத்திரையின் கடைசிப் பிரதி சென்ற நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்பது தெரிகிறது.

இந்நூலின் மறைவினால் தமிழர் வரலாற்றின் ஒரு பகுதியே மறைந்துபோய்விட்டது. இப்போது நமக்கு இந்நூலிலிருந்து கிடைத் துள்ள செய்யுள்கள் நாற்பத்தெட்டு. அவற்றைக் கீழே தருகிறேன். முதல் நாற்பத்துநான்கு செய்யுள்கள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டவை.

வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார்

வியத்தக்க தாக வியப்ப - வியத்தக்க

அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்ப ரினிது.

கிழிந்த சிதாஅ ருடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தார் தீயவை

ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம்

அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடி னருமறையர் நீடின்

உருவந் தமக்குத்தா மாய

1

இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே.

2

நூற்றுவரிற் றோன்றுந் தறுகண்ணர் ஆயிரவ

ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கு மகன்றோன்றும் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினும் இல்லை இரப்பாரை யெள்ளா மகன்.

3

இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற்

சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால்

ஆர்வமும் செற்றமும் நீங்கிமற் றியார்கண்ணும்

இன்னாத வேண்டா விகல்மேல் மறமன்னர் ஒன்றார்க் குயர்த்த படை.

4