பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

நாற்கை மாக்களின் நாட்பகத் தில்லை

அவனும்,

தாரொடு துயல்வருந் தயங்குமணிக் கொடும்பூண் மார்புடைக் கருந்தலை யெற்குறித் தனனே

யானும்

கடிகம ழுவகைக் கைவல் காட்சியென் றுடியவற் கவனரை யறுவை யீந்தனனே அதனால்,

என்னெறிந்து பெயர்த லவர்க்குமாங் கரிதே அவனெறிந்து பெயர்த லெமக்குமாங் கரிதே அதனால்,

என்ன தாகிலு மாக முந்நீர்

நீர்கொள் பெருங்குளந் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சங் குளிர்ப்ப வவன்றாய் மூழ்குவ ளொன்றோ வன்றே லென்யாய் மூழ்குவ ளொன்றோ வன்றியவன் றாயும் யாயும் முடன்மூழ் குபவே.

அடுதிறன் முன்பின னாற்ற முருக்கிப்

படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவ னூர்ந்தமாத் தீதின்றி

நாண்மகிழ் தூங்குத் துடியன் துடிகொட்டும்

பாணியிற் கொட்டுங் குளம்பு.

தருமமு மீதேயாந் தானமு மீதேயாங்

கருமமுங் காணுங்கா லீதாஞ் - செருமுனையிற்

கோள்வாள் மறவர் தலைதுமிய வென்மகன்

வாள்வாய் முயங்கப் பெறின்.

9

'இன்ப முடம்புகொண் டெய்துவீர் காண்மினோ

அன்பி னுயிர்மறக்கு மாரணங்கு - தன்கணவன்

அல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே

புல்லார்வேல் மெய்சிதைத்த புண்.

1°எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ

10

என்மக னாத லெற்கண் டறிகோ

கண்ணே கணைமூழ் கினவே தலையே

75

37

38

39

40