பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

மூதில்வாய் தங்கிய முல்லைசால் கற்புடை

மாதர்பாற் பெற்ற வலியுளவோ - கூதிரின்

வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற வழிவு.

26

மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி யமர்க்களங்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னார் உடையன தாம்பெற் றுவந்து.'

27

தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். 28

பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி இகலரணத் துள்ளவ ரெல்லாம் - அகலிய விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சும்பிளித்தார் கண். 29

19

20

21

22

தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வ ரன்னே - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைத்து. 30

23

இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்

பொற்றேரான் போனகங் கைக்கொள்ளான் - எற்றாங்கொல்

ஆறாத வெம்பசிந் தீயா லுயிர்பருகி

மாறா மறலி வயிறு.

24

தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று

பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு

வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக்

கொல்படை வீட்டுங் குறிப்பு.

31

25

வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி யொதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ்

வான்றோய் புரிசைப் பொறியு மடங்கினவால் ஆன்றோ ரடக்கம்போ லாங்கு.

32

26