பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

/ 87

காப்பத்துப் போரை வென்று புகழ்கொண்ட இராசேந்திர சோழன்மீது கொப்பத்துப் பரணி என்னும் நூல் இயற்றப்பட்டதாக இராசராச சோழன் உலா கூறுகிறது. இதனை,

66

..

கொலையானை

பப்பத் தொருபசிப்பேய் பெற்ற வொருபரணிக் கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன்

என்னும் கண்ணியினால் அறியலாம். இராசேந்திர சோழன்மேல் பாடப் பட்ட கொப்பத்துப் பரணி இப்போது கிடைக்க வில்லை. இந்நூலை இயற்றினவர் பெயர் முதலியனவும் தெரியவில்லை.

6. தென்றமிழ் தெய்வப் பரணி

இப்பெயருள்ள பரணி நூலைத் தக்கயாகப் பரணி கூறுகிறது.

"செருத்தந் தரித்துக் கலிங்க ரோடத்

தென்றமிழ் தெய்வப் பரணி கொண்டு

வருத்தந் தவிர்த்துல காண்ட பிரான்

மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே'

என்னும் தாழிசையைத் தக்கயாகப் பரணி (776) கூறுகிறது. இதனால் இப் பெயருள்ள பரணி நூல் ஒன்றிருந்த தென்பது தெரிகிறது. இத் தாழிசைக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: "இப்பரணி பாடினார் ஒட்டச்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப்பரணி பாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்.

وو

இதனால், கலிங்கப் போரைப் பாராட்டிச் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடியதுபோலவே, அதே கலிங்கப் போரைப் பாராட்டி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன்மீது இந்தப் பரணியைப் பாடினார் என்பது தெரிகிறது. இந்தப் பரணியின் பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பரணி பாடிய ஒட்டக் கூத்தராலேயே “தென்றமிழ்த் தெய்வப் பரணி என்று தக்கயாகப் பரணியில் கூறப்பட்டபடியால், அதுவே இந்தப் பரணிக்குப் பெயராக இருக்கலாம்.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன்மீது விக்கிரம சோழன் உலா என்னும் நூலை இயற்றியிருப்பதும். அவர் அவ்வரச னுன ய அவைக்களப் புலவராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கன. ஒட்டக் கூத்தர் இயற்றிய தென்தமிழ்த் தெய்வப் பரணி கிடைக்கவில்லை.