பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

7. வேறு பரணி நூல்கள்

முதலாம் இராசேந்திர சோழனுடைய மகன் இராசாதிராசன், இளவரசனாக இருந்தபோது கொப்பத்துப் போரை வென்றதை மேலே கூறினோம். இராசாதிராசன் கி.பி. 1044 முதல் 1054 வரையில் அரசாண்டான் என்பர். இவன் முடிசூடிய பின்னர், மேலைச்சளுக்கிய அரசனுடன் மூன்று முறை போர்செய்தான். இரண்டு தடவை போர் வென்றான். மூன்றாவது முறை, போர்க்களத்தில் யானைமேலிருந்த படியே உயிர்விட்டான். ஆகவே, “கல்யாணபுரமும் கொல்லாபுரமும் எறிந்து யானைமேற் றுஞ்சின உடையார் விசய ராசேந்திர தேவர்” என்று புகழப்படுகிறான். மூன்றாவது முறை இவ்வரசன் போரில் இறந்த போதிலும், வெற்றி பெற்றவர் சோழரே.

முன்பு இரண்டு தடவை இவன் சளுக்கியருடன் செய்த போரில் வெற்றிபெற்றதைப் பாராட்டி இவன் மீது ஒரு பரணி நூல் பாடப்பட்டது என்பதை ஒரு சாசனம் கூறுகிறது. அச்சாசன வாசகம் வருமாறு:

“கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானக மிருவர்க்கருளிக் கானகம் ஒருவனுக் களித்துப் பொருசிலைச் சேரலன் வேலைகெழு காந்தளூர்ச் சாலைக் கலமறுப்பித்து இலங்கையற் கரைசையும் அலங்கல் வல்லபனையுங் கன்ன குருச்சியர் காவலனையும் பொன்னணி முடித்தலை தடிந்துதன் கொடிப்படை ஏவிக் கன்நாடகர் விடு கரிபுரளத் தந்நாடையிற்(?) தமிட்பரணி கொண்டொன்னார் வச்சிர நெடுவாள் விச்சயன் வெருவி நெளித் தஞ்சியோடத் தன் வஞ்சியம் படையால் " வென்ற கோவிராசகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கியாண்டு 33 ஆவது.

44

இதனால், இவ்வரசன்மீது ஒரு பரணிநூல் இயற்றப்பட்ட தென்பது தெரிகிறது. இப்பரணியைத் தமிட் பரணி (தமிழ்ப் பரணி) என்று சாசனம் கூறுகிறது. இப்பரணியின் உண்மைப் பெயர் இதுதானா அல்லது வேறா என்பது தெரியவில்லை. இந்தப் பரணியைப் பாடியவர் யார் என்பதும் தெரியவில்லை.

வடஆர்க்காட்டு மாவட்டம், குடியாத்தம் தாலூகா, அம்முண்டி கிராமத்தில் உள்ள முப்பனை ஈசுவரம் உடையார்கோவிலில் உள்ள சாசனம் ஒன்று, கோவிராஜகேசரி பன்மரான சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவரின் 14ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அந்தச் சாசனத்தில், பரணியிரண்டும் ஒருவிசை கைக்கொண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பரணிகளின் பெயர் கூறப்படவில்லை. அப்பரணிகளைப் பாடியவர் பெயரும் தெரியவில்லை.

45