பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

99

ராஜனுக்கு மக்களாகப் பிறந்து இராமன் என்றும் இலக்குமணன் என்றும் பெயர் பெற்று வளர்ந்தார்கள். இராமன் வெள்ளை நிறமும், இலக்கு மணன் நீல நிறமும் உடையவராக இருந்தார்கள்.

இராமனுக்கு மணம் செய்ய நினைத்துத் தசரதன் ஜனகராஜன் மகள் சீதையை மணம் பேசத் தூதுவர்களை அனுப்பினான். ஜனகராஜன் இத்திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, தான் ஒரு யாகம் செய்யப்போவ தாகவும், அந்த யாகத்துக்கு இராம இலக்குமணர்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும், யாகம் முடிந்தவுடனே இராமனுக்குச் சீதையை மணம் செய்விப்பதாகவும் விடையளித்தான். இச்செய்தியைத் தூதர்கள் வந்து தசரதனிடம் கூறினார்கள்.

அப்போது ஆகமசாரன் என்னும் அமைச்சன் தசரத அரசனைப் பார்த்துக் கூறினான்: “ஐனகராசன் செய்யப்போகிற பிராணி இம்சை யுள்ள யாகம் கொள்ளத்தக்கதன்று, முற்காலத்தில் சகரராசனைப் பிராணி இம்சை யாகம் செய்யும்படி மகாகாளன் என்பவன் சூழ்ச்சி செய்து சகர குடும்பத்தை நாசமாக்கினான்" என்று கூறி அந்த வரலாற்றைக் கூறினான்:

சாரணயுகளம் என்னும் நகரத்தில் சுயோதனன் என்னும் அரசனும், அதிதி என்னும் அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குச் சுலசை என்னும் ஒரு மகள் பிறந்தாள். அந்த மகள் வளர்ந்து மணப்பருவம் உள்ள மங்கையானாள். அதனால், சுயோதன அரசன் அவளுக்குச் சுயம் வரத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தான். திருமணத்திற்குப் பல நாட்டு அரசர்களும் வந்திருந்தார்கள். சுலசையின் மாமன் மகனான மது பிங்களன் என்னும் அரசகுமாரனும் வந்தான்.

அயோத்தியரசன் சகரன் என்பவனும் சுயம்வரத்துக்குப் போகப் புறப்பட்டான். அவன் தலைக்கு வாசனை எண்ணெய் பூசி அலங்கரித்த போது ஒரு நரைமயிரைக் கண்டு, பணியாளன் அதனை அரசனுக்குக் காட்டினான். தன்னுடைய நரைமயிரைக் கண்ட சகரராசன், சுலசை தனக்கு மாலையிடமாட்டாளே என்று கவலை கொண்டு, அவளைத் தந்திரத்தினால் அடைய விரும்பினான். தன் பணிப்பெண்ணாகிய மண்டோதரி என்பவளை அழைத்து, எப்படியாகிலும் சுலசையைத் தனக்கே மாலையிடும்படி செய்யவேண்டும் என்று கூறினான். அதற்கு அவள் அவ்விதமே சூழ்ச்சி செய்வதாகக் கூறி விடைபெற்றுக்கொண்டு, சாரணயுகள் நகரம் சென்று சுலசையின தோழியாக அமர்ந்து, சகர