பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பாட பேதங்கள்

ஏட்டுப் பிரதிகள் கிடைத்தாலும் அப்பிரதிகளில் பாட பேதங்கள் மலிந்திருந்தன. ஏடெழுதுவோரால் நேரிட்ட பிழைகளும் இருந்தன.

கவே, ஏட்டுப் பிரதிகளை அச்சிடுவோர் முதலில் பல ஏடுகளை ஆராய்ந்து பார்த்துச் சரியான பாடங்களைக் கண்டறிந்து பிறகு அச்சிட வேண்டியவராயினர். சென்ற நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் இச்செய்திகள் காணப்படுகின்றன.

1832-ஆம் ஆண்டில் பழமலையந்தாதி, திருச்செந்தினி ரோட்டக யமகவந்தாதி என்னும் நூல்கள் ஒரே புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டன. அந்நூலின் முகப்பில் இவ்வாறு எழுதப் பட்டுள்ளது.

66

'எழுத்துஞ் சொல்லும் கையெழுத்துப் பிரதிகளிலே மிகுத்துங் குறைத்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பாடந் தோறும் வேறுபட்டிருத்தலால் அப்பிழைகளை நீக்கிச்சுத்த பாடமாக வழங்குவிக்கும் பொருட்டுப் பழைமையாகிய பல பிரதிகளை அழைப்பித்துப் பரிசோதித்துச் சென்னப் பட்டினத்தில் கனம் பொருந்திய பிரபுக்க ளேற்படுத்தின விவேகக் கல்விச் சாலைத் தமிழ்த் தலைமைப் புலவராகிய திருத்தணிகை சரவணப் பெருமாளையரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன.’

وو

1893-ஆம் ஆண்டில், தஞ்சைவாணன் கோவையை அச்சிற் பதிப்பித்த திருமயிலை தெய்வசிகாமணி முதலியாரும், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையும் அந்நூலின் முகவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள்:

“இவ்விலக்கியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கி எம்பாற் கிடைத்த பிரதி பேதங்களைப் பரிசோரித்து வருங்கால் யாவும் ஒன்றுக்கொன்று ஒரிடத்தினன்றிப் பல விடத்தினும் முறையெழுதுவோரால் பிழைத்ததும் விடுவித்ததுமாகிய செயலாலும் பூச்சுக்களின் வாய்ப்பட்டு பழுதெய்திய மையாலும் ஆங்காங்கு அவையிற்றின் பொருள்க ளின்னவென எளிதிற்றேர்தற்கு இடம் பெறாமற் போயினமையின் இதுகாறும் காலம் நீட்டித்த தென வறிக.

இவ்வாறு சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பட்ட அச்சுப் பிரதிகளில் ஏட்டுப் பிரதிகள்தோறும் பாடபேதங்கள் இருந்த செய்தி