பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

101

குறிப்பிடப்பட்டுள்ளது காணலாம். ஏட்டுச் சுவடிகள் பிரதிக்குப் பிரதி பாடபேதங்கள் உள்ளவை பாட பேதம் இல்லாத ஏட்டுச்சுவடிகள் மிக அரியன. அச்சுப் புத்தகங்களில் பாடபேதங்களைக் காண முடியாது. ஒரே பதிப்பில் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டபோதிலும் எவ்வாறு பாட பேதம் இருக்க முடியும்?

ஏட்டுச்சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களைத் தமிழ்ப் புலவர் களும் சைவ மடாலயங்களும் போற்றிப் பாதுகாத்து வந்தனர், அரசர்கள் பிரபுக்கள் முதலியவர்களின் புத்தக சாலைகளிலும் ஏட்டுச் சுவடிகள் சேமித்து வைக்கப்பட்டன. ஆனாலும், ஏட்டுச் சுவடிகளை முக்கிய மாகப் போற்றிக் காப்பாற்றியவர்கள் புலவர் பரம்பரையும், கவிராயர் குடும்பங்களும், சைவ மடாலயங்களுமே, அவற்றைப் புதிய ஏடுகளில் பிரதி எழுதிவைத்துக்கொண்டு பழைய பழுதுபட்ட சுவடிகளை அழித்து விடுவார்கள். பனை ஒலைகளில் இரும்பு எழுத்தாணியால் எழுதுவது கடினமான வேலை. ஒரு நூலைப்பிரதி எழுதுவதற்கு நேரமும் உழைப்பும் அதிகமாகக் கொண்டன. கூலி கொடுத்து எழுதினால் செலவு அதிகம் பிடிக்கும். ஏடெழுதுவோர் கற்றறிந்த அறிஞராக இல்லாவிட்டால், அல்லது எழுதும்போது கருத்தைச் செலுத்தி எழுதாவிட்டால், அப் பிரதியில் பிழைகளும் பாட பேதங் களும் ஏற்படும். ஓலைச் சுவடிகளில் பிரதிக்குப் பிரதி பாடபேதங்கள் இருப்பதற்குக் காரணம் ஏடெழுதுவோரின் கவனயின்மையும் அறியாமையுமே.

ஏட்டுச் சுவடி விலை

அச்சுப் புத்தகங்களைவிட ஏட்டுச்சுவடிகள் அதிக விலை பெற்றன. பொருள் உள்ளவர் மட்டும் ஏட்டுச்சுவடியை ஏடெழுது வோருக்குப் பொருள்கொடுத்துஎழுதிக் கொள்ள முடியும். பொருள் இல்லாதவர் பிரதி பெற முடியாது. இதனால், பண்டைக் காலத்தில் இருந்த சமணசமயத்தார் (ஜைனர்) சாஸ்திர தானம் என்னும் ஒரு தானத்தை ஏற்படுத்தி யிருந்தார்கள். செல்வர்களான சமணசம யத்தவர் வீடுகளில் திருமணம் முதலிய சிறப்புக்கள் நடைபெறும் போது தமது சமய நுல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து, அப் பிரதிகளைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். இதற்குத்தான் சாஸ்திர தானம் என்பது பெயர். பண்டைக் காலத்தில் செல்வர்கள் தான் பெரும்பொருள் செலவிட்டுப் புத்தகசாலை அமைக்க முடியும்.

ம்