பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பெர்சிவல் ஐயர். (Rev. P. Percival) 1835 -ஆம் ஆண்டுக்கு முன்னர் சதுரகராதி ஓலைப் பிரதியைப் பத்துப் பவுன் (நூற்றைம்பது ரூபா) விலை கொடுத்து வாங்கியதாகவும் அந்த அகராதி அச்சிற் பதிப்பிக்கப்பட்ட பிறகு ஒரு பிரதியை 21/2 ஷில்லிங்கு (1 ரூபா 14 அணா) விலை கொடுத்து வாங்கியதாகவும் மர்டாக் என்பவர் எழுதியுள்ளார். இதிலிருந்து அச்சுப் புத்தகத்துக்கும் ஏட்டுச் சுவடிக்கும் விலையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில், ஒரு நூல் வேண்டியிருந்தால் அந்நூல் வைத்திருப்பவரிடம் சென்று அந்நூலைப் பெற்றுப் பிரதி எழுதிக் கொள்ளவேண்டும். முதலில், யாரிடம் அந்த நூல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரதி உள்ளவர் அதனை இரவல் கொடுக்கமாட்டார். இரவல் கொடுத்தால் திரும்பி வராது என்னும் அச்சத்தினால், ஆகவே, அவர் வீட்டுக்குச் சென்று பிரதி எழுதிக் கொள்ளவேண்டும். பிரதி எழுதுவதற்குநேரமும் உழைப்பும் அதிகமாகச் செல்லும். இந்தக் கடினமான வேலைக்கு அஞ்சி, புலவர் தம்மிடமுள்ள ஒரு நூலை மற்றவருக்குக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாகத் தமக்கு வேண்டிய வேறு நூலைப் பெற்றுக் கொள்வதும் உண்டு.

அச்சுப் புத்தகங்கள் கிடைக்கிற இக்காலத்தில் புத்தகங்களின் அருமை பெருமை நமக்குத் தெரிவது இல்லை. காசு கொடுத்தால் புத்தகம் கிடைக்கும் என்னும் உறுதியினால். ஆனால், அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகள் செல்வம் போலப் போற்றப்பட்டன. ஏட்டுச் சுவடிகள் புலவர் குடும்பங்களில் பெருஞ் செல்வமாக மதிக்கப்பட்டன.

மறைந்த நூல்கள்

அச்சியந்திரங்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாட்டில் பௌத்த மதமும் சமண சமயமும் மறைந்து விட்டபடியால், பௌத்த சமண சமய நூல்கள் பாதுகாக்க ஆளில்லாமல் மறைந்துவிட்டன. முக்கியமாகப் பௌத்த மத நூல்கள் அழிந்துவிட்டன. சமண சமயத்தவர் சிறுபான்மையோர் எஞ்சியிருக்கிற படியினால், சமண சமய நூல்கள் சில அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. னாலும் பல நூல்கள் சில அழிந்து போயின. சமயக் காழ்ப்புக் காரணமாகச் சைவர்களும் வைணவர்களும் பௌத்த சமண சமய