பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

1854

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

Tamil quartely Repository: மதுரையில் இருந்த அமெரிக்கன் மிஷன் வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகை நான்கு ஆண்டு நடைபெற்றது.

1855 தினவர்த்தமானி: பெயரைக் கண்டு தினசரி பத்திரிகை எனக் கருதவேண்டாம். இது வாரப் பத்திரிகை. வியாழக் கிழமை தோறும் வெளிவந்தது. பெர்சிவல் பாதிரியார் (Rev. P. Percival) இதைத் தொடங்கி இதன் ஆசிரியராக இருந்தார். தினசரி பத்திரிகையின் பெரிய அளவில் அச்சிடப்பட்டது. செய்தி களுடன். இலக்கியம், விஞ்ஞானம் முதலிய கட்டுரைகளும் வெளிவந்தன. அரசாங்கத்தார் மாதம் 200 ரூபாய் இப்பத்திரி கைக்கு நன்கொடையளித்தனர். பெர்சிவல் ஐயர் விலகிக் கொண்ட பிறகு, இந்நன்கொடை நிறுத்தப்பட்டது. அவருக்குப் பிறகு, ஏட்டுச் சுவடியிலிருந்து பல நூல்களைப்

பதிப்பித்தவரான சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதன் ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். பிறகு விசுவநாத பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார். தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை இதுவே.

1856 District Gazette: மாவட்டங்கள் தோறும், அங்கு வழங்குகிற தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் அரசாங்கத்தாரால் அச்சிடப்பட்டது. தமிழ் மாவட்டங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டது. வாரப் பத்திரிகை. சன்னை பட்டினம், தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, கோயமுத்தூர், சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப் பள்ளி. தஞ்சாவூர் ஆகிய தமிழ் மாவட்டங்களில் தமிழில் எழுதப்பட்டது. அந்தந்த மாவட்டம் சம்பந்தப்பட்ட அரசாங்க அறிக்கைகளும், பஞ்சாங்கம், தட்ப வெப்ப நிலை, விலைவாசி முதலியவை இதில் வெளியிடப்பட்டன.

1851 பாலியர் நேசன்: யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சிறுவர்க்கான வெளியீடு.

1859 தர்மப்பள்ளி போதம்: நாகர்கோவிலிலிருந்து வெளியாயிற்று. 1861

தேசோபகாரி: திங்கள் இதழ். கிறிஸ்துவருக்காகவும் இந்துக்களுக்காகவும் ஒவியங்களுடன் அச்சிடப்பட்டது. 1863-