பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

121

1879 நடுத்தர உயர்தர பள்ளி நண்பன்: இதன் ஆசிரியர் அண்ணாதுரை ஐயர். சென்னை வித்தியா வர்த்தனி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

1880

1881

சுதேசமித்திரன். இது இன்றும் நடைபெறுகிறது. தினசரிப் பத்திரிகை.

கலாநிதி: பகடால S. P. நரசிம்மலு நாயுடு அவர்களால் சேலத்தில் நடத்தப்பட்டது. இவரே, சுதேசாபிமானி என்னும் பத்திரிகையை இந்த ஆண்டுக்கு முன்பு நடத்தினார். எத்தனை ஆண்டு என்பது தெரியவில்லை.

1882 தத்துவ விவேசினி: சென்னையிலிருந்து வெளிவந்தது. தமிழ்ப் புரொபஸர் பு. முனிசாமி நாயகர் இதன் ஆசிரியர்.

1882 சத்திய வேதக்கொடி: திங்கள் இதழ் மாசிலாமணி என்பவ ரால் கிறிஸ்துவர்களுக்காக வெளியிடப்பட்டது.

1883 சுகுணபோதினி: திங்களுக்கு இருமுறை சென்னையில் அச் சிடப்பட்டது. இதன் ஆசிரியர், இ. பாலசுந்தர முதலியார்.

1883 இந்துமத சீர்திருத்தி: பாளையங்கோட்டையிலிருந்து வெளி வந்தது. இதன் ஆசிரியர், கே. ஆறுமுகம் பிள்ளை.

1884 தீர்க்கதரிசன வர்த்தமானி: மூன்று திங்களுக்கு ஒரு முறை மாசிலாமணி என்பவரால் கிறிஸ்துவர்களுக்காக வெளியிடப் பட்டது.

1884 சத்திய வேதானுசாரம்: கிறிஸ்துவ மதப் பத்திரிகை. சென்னையிலிருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியர், எம். சி. யோகப்பிள்ளை.

1886 பிரம வித்தியா. திங்கள் இதழ். தமிழ் வடமொழி இரண்டிலும் எழுதப்பட்டது. K. R. சீனிவாச தீக்ஷிதரால் சிதம்பரத்திலி ருந்து இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்களின் பொருளுதவி பெற்று நடந்தது.

1886

கலா தரங்கினி: திங்கள் இதழ். இராஜகோபால செட்டியாரால் சென்னை. சூளை திராவிட ரத்தினாகரம் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. 1889 வரையில் நடந்ததாகத் தெரிகிறது.