பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1886 லோக ரஞ்சனி: திங்கள் இதழ். T. நாதமுனி நாயுடு இதன் ஆசிரியர். பல்லாரி கௌல் பஜார் நியூட்ரல் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டது.

1887 ஜனோபகாரம்: இதன் விபரம் தெரியவில்லை.

1887 மாதர் மித்திரி: சென்னையில் வெளியிடப்பட்டது.

1887 சிங்கை நேசன்: சிங்கப்பூரிலிருந்து வெளிவந்தது. 1890 வரையில் நடைபெற்றது.

1887 விவேக போதினி: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் யந்திர சாலையில் எ.எல்.இராசு செட்டியாரால் வெளியிடப்பட்டது. 1887 லோக ரஞ்சினி: திங்கள் இதழ். வேலூரிலிருந்து சி. ஜி. அப்பு முதலி என்பவர் இதனை வெளியிட்டார்.

1887 திராவிட ரஞ்சினி: திங்கள் இதழ். திருச்சியிலிருந்து வெளி வந்தது. டி. வி. வெங்கடராசு நாயுடு இதன் ஆசிரியர்.

1887 விவேக சுந்தரம்: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டு செட்டியாரால் வெளியிடப்பட்டது.

எஸ். நமசிவாய

1887 ஜனோபகாரம்: திங்கள் இதழ். சென்னை ரிப்பன் அச்சு யந்திர சாலையில் அச்சிடப்பட்டு, சி. சடையாண்டி செட்டியாரால் வெளியிடப்பட்டது.

1887 மகாராணி: திங்கள் இதழ். மகளிருக்காக வெளியிடப் பட்டது. சென்னை வி. என். ஜுபிலி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. வி. கிருஷ்ண மாச்சாரியார் இதன் ஆசிரியர்.

1887 கிராமப் பள்ளி ஆசிரியன். திங்கள் இதழ். கோபாலையர் இதன் ஆசிரியர். சென்னை அல்பினியன் அச்சகத்தில்

1887

அச்சிடப்பட்டது.

உலக நேசன். பினாங்கிலிருந்து வெளிவந்தது. முகமதியாரால் அச்சிடப்பட்டது.

1888 பினாங்கு விஜயகேதனன். திங்கள் இதழ். பினாங்கிலிருந்து வெளி வந்தது. 1899 வரையில் நடந்தது.