பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

1894 சண்முக விஜயம்: இதன் ஆசிரியர் டி.ஏ. கிருஷ்ணசாமி ஐயர். சென்னை ரிப்பன் அச்சுயந்திர சாலையில் அச்சிடப்பட்டது. 1895 சோமரவி: தமிழ்-ஆங்கிலம். மூன்று திங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டது. சென்னையிலிருந்து சி.ஈ. ஸ்ரீநிவாச ராகவாச்சாரியால் வெளியிடப்பட்டது.

1895 கோமாலி: தமிழ்-ஆங்கிலம். மூன்று திங்களுக்கொருமுறை சென்னையிலிருந்து வெளியாயிற்று.

ரு

1896 தேஜோபிமானி: திங்களுக்கு இரு முறை வெளிவந்தது. அம்பலவாணப் பிள்ளை இதன் ஆசிரியர். அரசியல், சமுதாயம், இலக்கியம் முதலிய விஷயங்கள் இதில் வெளியிடப்பட்டன. Perak என்னும் இடத்திலிருந்து வெளியிடப்பட்டது.

1897

ஞானபோதினி: ஏம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை இதன் ஆசிரியர். சமயம், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம் முதலியவை இதில் எழுதப்பட்டன. திங்கள் இதழ் சென்னை. 1897 உண்மை விளக்கம்: அல்லது, சித்தாந்த தீபிகை. திங்கள் இதழ். N. வேதாசலம் பிள்ளை அவர்களால் சென்னை யிலிருந்து வெளியிடப்பட்டது.

1897 தமிழ்க் கல்விபத்திரிகை: திங்கள் இதழ். சென்னையிலிருந்து. கே, பார்த்தசாரதி ஐயங்காரால் வெளியிடப்பட்டது.

1898 அருணோதயம்: திங்கள் இதழ்; கிறிஸ்தவப் பத்திரிகை; விபரங்கள் தெரியவில்லை.

கீழ்க்கண்ட இதழ்களும் 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந் தவை. இவை எந்த ஆண்டில் தொடங்கப்பட்டன. யாரால் வெளியிடப்பட்டன என்னும் விபரங்கள் தெரியவில்லை.

அபிமான திருவனந்தபுரம்

அமிர்தவசனி: திருச்சிராப்பள்ளி.

இலங்கை நேசன், இலங்காபிமானி, இந்துசாதனம்: இவை இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தன.

உதயபானு: யாழ்ப்பாணம்.