பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண நூல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையில் தமிழில் வசன நூல்கள் ஏற்படவில்லை என்று கூறினோம். 18-ஆம் நூற்றாண்டிலே கிருத்தவப் பாதிரிமார் சிலர் வசன நடையில் தமிழில் நூல் இயற்றத் தொடங்கியது உண்மைதான். ஆனால். 19-ஆம் நூற்றாண்டிலேதான் வசன நூல்கள் வளர்வதற்கு வாய்ப்பும் அச்சியந்திரம் முதலிய சூழ் நிலைகளும் ஏற்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார், நமது நாட்டைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கினார்கள். அவர்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து ஆங்கிலேயரை அழைத்து வந்து இந்நாட்டின் அரசாங்க மேலதிகாரிகளாக அவர்களை நியமித்தார்கள். ஆங்கிலேயர் நமது நாட்டுமொழிகளை அறியாத வர்கள். மேலதிகாரிகளாக அமர்ந்த அவர்கள் நாட்டு மொழிகளை அறிந்திருக்க வேண்டியவராக இருந்தனர். ஆகவே, அவர்கள் அலுவல் நடத்தும் வட்டாரங்களில் வழங்கும் இந்தியமொழிகளை அறிந்திருக்கவேண்டும் என்னும் கட்டாயம் அக்காலத்தில் இருந்தது. அக்காலத்தில் ஆங்கில மொழி அரசாங்க மொழியாக அமைய வில்லை. இந்திய நாட்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் படித்துப் பரீட்சையில் தேறினர். ஆங்கில உத்தியோகஸ்தர்களுக்குச் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்பட்டபடியால், ஆங்கிலேய உத்தியோகஸ் தர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்கத் தொடங்கி னார்கள். இந்த முறையில் தமிழ் நாட்டில் வந்து அலுவல் செய்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கினார்கள்.

தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கிய ஆங்கிலேயர் களுக்குத் தமிழ் இலக்கண நூல்கள் எளிதில் விளங்கவில்லை. ஏனென்றால், நன்னூல் முதலிய இலக்கணங்கள் செய்யுள் நடையில் அமைந்திருந்தன. வசன நடையில் இலக்கண நூல்கள் அந்தக் காலத்தில் இல்லை. சூத்திரங்களைப் படித்து அவற்றிற்குப் பொருள் தெரிந்துகொண்டு பின்னர் இலக்கணத்தை அறிந்துகொள்வது