பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஸ்லாமும் தமிழும்

கி.பி. 12-ஆம் நூற்றாண்டு முதல் முகம்மதிய மதத்தவரான முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றனர். பிற்காலப் பாண்டிய ருடைய அரச சபையிலே அராபியர் ஒருவர் இடம் பெற்றிருந்தார் என்றும், அவர் பாண்டியனுடைய குதிரைப் படைக்குக் குதிரைகளை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துக் கொடுத்தார் என்றும் அறிகிறோம். 14-ஆம் நூற்றாண்டில் மாலிக்காபர் தென்னாட்டின் மேல் படை யெடுத்து வந்து கோவில்களைக் கொள்ளையடித்த காலத்தில், இந்துக் கள் சிலர் இஸ்லாம் மதத்தைத் தழுவி முஸ்லிம் ஆனார்கள். 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டிலே அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு, முஸ்லிம்களாகிய நவாபுகள் நாட்டை ஆட்சிசெய்தனர். அவர்கள் காலத்திலே தமிழ் நாட்டிலே முஸ்லிம்களின் தொகை பெருகியது. மதம் மாறி முகம் மதியரான தமிழரின் தாய்மொழி தமிழ் மொழியே. ஆகவே, தமிழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியிலே தமது மத சம்பந்தமான நூல் களையும் இயற்றினார்கள்.

முஸ்லிம்களின் "தெய்வ பாஷை” அரபு மொழியாக இருந்தது. முகம்மதியரின் குர்ஆன் வேதம் அரபுமொழியில் எழுதப்பட்டது. குர் ஆன் வேதத்தை அரபு மொழியிலேயே படிக்க வேண்டும் என்றும் அதை வேறு மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடாது என்றும் அக்காலத்தில் முஸ்லிம்களுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. தமிழ் முஸ்லிம்களும் தமது மத சம்பந்தமான நூல்களை அரபு எழுத்திலேயே படிக்கவேண்டும் என்றும் அக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆகவே, அரபு மொழியிலிருந்து, அரபி எழுத்தைப்போலவேயுள்ள ஒருவித புதிய எழுத்தைத் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டார்கள். அந்த எழுத்துக்கு அரபுத்தமிழ் என்பது பெயர். அரபுத் தமிழுக்கு "ஆர்வீ" என்று வேறு பெயரும் உண்டு. அரபுத் தமிழ் எழுத்து அரபி எழுத்து போலவே இருக்கும். அரபு எழுத்தைப்