பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

அல்லாஹீத்தஆலா=உத்தமமான கடவுள்.

அல்வா, ஹல்வா=இனிப்புச் சிற்றுண்டி.

அனாமத்து=சேமித்துவை, ஒப்படை.

ஆசர், ஆஜர்=தோன்றுதல், பலர் முன்னிலையில் காணப்படுதல்.

இமாம்=குரு.

இனாம்=கொடை, பரிசு.

இனாம்தார்=பரிசாகப் பெற்ற நிலத்தை வரி செலுத்தாமல்

அனுபவிக்கிறவன்.

ஈது=பண்டிகை.

ஈமான்=விசுவாசம், உறுதியான நம்பிக்கை.

உக்கும், உக்கூம், ஹூகும் ஆணை, உத்தரவு, கட்டளை, அதிகாரம்.

உக்கும் நாமா=எழுத்து மூலமான கட்டளை.

உசூர்,அசூர்=நேரில் காணப்படு, தோன்று.

"

உசூர்க்கச்சேரி=கலெக்டர், மாஜிஸ்ரேட் முதலிய உத்தியோகத்தின்

ஆபீஸ்.

உஸ்தாத்=உபாத்தியாயர்.

ஊக்கூம்=கட்டளை, உத்தரவு.

ஐவஜ், ஐவேஜ்=பதிலுக்கு வைத்த பொருள், மற்றொன்றுக்காக வைத்த ஈடு.

கசாபு=இறைச்சி விற்கிறவன்.

கசாலா=வருத்தம், துயரம்.

கசுபா=ஜில்லா அல்லது தாலுகாவின் தலைமை இடம், அல்லது கிராமம்.

141

கச்சேரி=நீதிமன்றம், வரி வசூல், போலிஸ் இலாகாக்களின் அலுவல் நிலையம்.

கபர்=செய்தி.

கரார்=உறுதி.

கரார்நாமா=எழுதப்பட்ட உறுதிச்சீட்டு.