பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அருணாசல முதலியார் அச்சிட்டார். ஐயாசாமி முதலியார் என்பவர் இவர் மீது குணங்குடி நாதர் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலை இயற்றினார். மகாவித்துவான் திருத்தணிகைச் சரவணப் பெருமா ளையர் இவர்மீது நான்மணிமாலை பாடினார்.

2

இரேனியூஸ் ஐயர் (1790-1838)

ஜர்மனி தேசத்திலே மேற்குப் பிரஷ்யா மாகாணத்தில் கிராவ்டென்ஸ் கோட்டையில் 1790-ஆம் ஆண்டு பிறந்தார். பெர்லின் நகரத்திலும் இங்கிலாந்து தேசத்திலும் மிஷனரிப் பயிற்சி பெற்று 1814– ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். பிறகு, தரங்கம் பாடிக்குச் சென்று தமிழ் கற்றார். மீண்டும் சென்னைக்கு வந்து சர்ச்சு மிஷன் சங்கத்தின் சார்பில் கிறிஸ்து சமய ஊழியம் செய்தார். 1820-ஆம் ஆண்டு திருநெல்வேலிக்குச் சென்று அங்குச் சமயத்தொண்டு செய்தார். அங்குப் பெருவாரியாக இந்துக்களைக் கிறிஸ்துவராக்கினார். 1838- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் நாள் காலமானார். இவர் உடல் திருநெல்வேலியில் முருகன் குறிச்சியில் அடக்கம் செய்யப்பட்டது.

ம்

இவர் இறந்தபோது இவருடைய நண்பரான திருநெல்வேலி பாற்கடல்நாதன் கவிராயர் இவர்மீது பாடிய இரங்கற்பாக்களில் ஒன்று

இது.

அனைநிக ரன்பும் இயேசுவின் அருளும்

அவனியிற் பொறையும் விண்சுடரோன் தனைநிக ரொளியும் மலைநிகர் வலியும் தழைத்திட வாழ்ந்து நன்மொழியால் கனைகழல் வேந்தர் முதலினோர்க்

காட்டிநற் கதியினைச் சேர்ந்தான் தினையள வைய மின்றிநற் கலைகள் தேர்ந்த விரோனியூ சென்போன்.

இவர், தமிழில் நன்றாக வசனநடை எழுதவும் சொற்பொழிவு செய்யவும் வல்லவர். இயற்றமி ழாசிரியரான இராமாநுச கவியாரிடம் கல்வி பயின்றார். பல தமிழ்ப் புலவர்களின் நண்பராக விளங்கினார். கனம் ஜீ. யு. போப்பையர் அவர்கள், இரேனியூசையரைத் தமிழில் தேர்ந்த அறிஞர் என்று புகழ்ந்திருக்கிறார்.