பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

165

இவர் இயற்றிய நூல்கள்: ஞானபோசன விளக்கம். இது வினாவிடையாக எழுதப்பட்டது. (1825), வேதப் பொருள், பூமி சாஸ்திரம் இலக்கண நூற்சுருக்கம். இவை 1832-ஆம் வ 1832-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன. மோட்ச மார்க்கம். (எபிரேயு, கிரேக்க பாஷையிலே யிருக்கிற சத்திய வேதத்திலிருந்து எடுத்து எழுதியது. சர்ச்சு மிசியோன் அச்சுக்கூடத்தில் 1834-இல் அச்சிடப்பட்டது.) வேதவுதார ணத்திரட்டு (1835). A Grammar of Tamil Language. இது தமிழ் கற்கும் ஐரோப்பியருக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. (1836) வேதசாஸ்திரச் சுருக்கம் 1838. பலவகைத் திருட்டாந்தம் என்னும் பொது அறிவுநூலையும் எழுதினார். பெப்ரேஷியஸ் ஐயரால் தமிழில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடு என்னும் விவிலிய வேதத்தைப் பரிசோதித்து அச்சிட்டார். சமயச் சார்பான பல பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்.

விசுவநாத சாத்திரியார் (?-1836)

துண்டுப்

யாழ்ப்பாணத்து அராலி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சோதிடம் இவற்றை நன்கு கற்றவர். 'இராசாவின் கணிதர்’ என்னும் சிறப்புப் பெயரை அரசாங்கத்தாரால் தரப் பெற்றவர். வண்ணக் குறவஞ்சி, நகுமலைக் குறவஞ்சி என்னும் நூல்களை இயற்றினார்.

முத்துக் குமாரக் கவிராயர் (?-1841)

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவர் ஊர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இவருடைய பௌத்திரர். சி.வை. தாமோதரம் பிள்ளையின் ஆசிரியர். இவர் இயற்றிய நூல்கள்: ஞானக் கும்மி, ஏசுமத பரிகாரம், ஐயனாரூஞ்சல், நடராசர் பதிகம். இவர் இயற்றிய தனிப் பாடல்களைத் தொகுத்துச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் 'முத்தக பஞ்ச விஞ்சதி' என்னும் பெயருடன் அச்சிட்டார்.

புதுவை நயனப்ப முதலியார் (1779-1845)

இவருடைய ஊர் புதுச்சேரி. சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்ப்புலவராக இருந்தார். ஓய்வுநேரங்களில் ஓலைச்சுவடி நூல்களை ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். அவ்வாறு இவர் வெளியிட்ட நூல்களாவன: திருச்சிற்றம்பலக் கோவை, தஞ்சைவாணன் கோவை, ஒருதுறைக் கோவை, நாலடியார், திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு (11-ஆவது நிகண்டு.)