பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அக் காலத்தில், வில்லிபுத்தூரார் பாரதத்தை, அச்சிடுவதற்காக ஒரு கூட்டம் கூட்டிக் கனவான்கள் சிலரைக் குழுவினராக ஏற்படுத்தி அதனைப் பதிப்பிக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்கள். அதற்காக இவர் ஏட்டுச் சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று காலமானார்.

இராமாநுச கவிராயர் (?-1852).

இயற்றமிழாசிரியர் இராமநாநுச கவிராயர் இராமநாதபுரத்து முகவை என்னும் ஊரினர். இவர் சிப்பாய்ப் பட்டாளத்தில் போர்வீரராக இருந்தவர். தமிழ் கற்றது பிற்காலத்தில். மாதவச் சிவஞானசுவாமிகளின் மாணவரும், இராமநாதபுர அரசரின் அவைப் புலவருமான சோமசுந்தரம் பிள்ளையிடம் இவர் தமிழ் கற்றார்.

"சோமசுந் தரனெனுந் தொன்னூற் குரவன் காமர்செஞ் சேவடி கண்ணிணை யாக்கொண்டு இயல்பல வுணர்ந்தோர் எண்ணிலர் அவருழைத் துயல்வரு கீழ்மையிற் றொடர்கீழ் நிலையினேன்.

என்று இவர் தம்மைப் பற்றிக் கூறுகிறார்.

பிற்காலத்தில் இவர் சென்னையில் சஞ்சீவிராயன் பேட்டையில்

வாழ்ந்தார்.

இப்பேட்டையின் பெயர் இவரால் உண்டாயிற்று. இவர் குடியிருந்த வீதிவழியே ஒருவன் இரட்டைமாட்டு வண்டியின் பின் பளுவுக்காக ஒரு கருங்கல்லை வைத்துக் கொண்டு போனானாம். அந்தக் கல்லில் அனுமான் உருவம் அமைந்ததால், அதனைக் கண்ட கவிராயர், வைணவ பக்தியுள்ளவராகையால், அவனிடமிருந்து அந்த அனுமான் உருவக் கல்லைப் பெற்று அதனை அத் தெருவிலிருந்த பிள்ளையார் கோவிலில் அமைத்து அந்த உருவத்திற்குச் சஞ்சீவி ராயன் என்று பெயர் கொடுத்தாராம். பிறகு அந்தத் தெருவுக்குச் சஞ்சீவிராயன் தெரு என்றும் அந்தப் பேட்டைக்குச் சஞ்சீவிராயன் பேட்டை என்றும் பெயர் வந்தது. இவர் சென்னையில் சொந்தமாக ஒரு அச்சியந்திரசாலை வைத்து நடத்தினார்.

இவரிடம் தமிழ்க்கல்வி பயின்றவர் அஷ்டாவதானம் வீராசாமிக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் முதலியோர். அன்றியும்