பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

169

கீர்த்தனை, திருவரங்க மான்மியம், திருத்தவத்துறை மான்மியம், திருவன்பிலாந்துறை மான்மியம், குமார சம்பவம், பிரபோத சந்திரோதயம்.

ஐதுறூசு நயினார்ப் புலவர் (?-1876)

முஸ்லீம் மதத்தவர். நவமணிமாலை என்னும் நூலை 1852-ஆ ண்டு இயற்றினார். வெவ்வேறு சமயங்களில் இவர் பற்பல செய்யுட்களைப் பாடியுள்ளார். அப்பாடல்கள் தொகுக்கப்பட்டு, ஐதுறூசு நயினார்ப் புலவரவர்கள் பாடற்றிரட்டு என்னும் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளன.

முருகேசக் கவிராயர் (1792-1888)

பனையஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இராமச்சந்திர தொண்டைமானின் அவைப்புலவராக இருந்தார். பல தனிச்செய்யுட்களைப் பாடியிருக்கிறார். ஆனந்தக் களிப்பு, பஞ்சரத்தினமாலை சிந்து, உலகநாத சாமி சரித்திர அகவல் என்னும் நூல்களை இயற்றியிருக்கிறார். இவருடைய தம்பியார் ப. அரங்கசாமி பிள்ளை அவர்கள், அரங்கசாமி பிள்ளை, சீவக சிந்தாமணியை, (பதுமையார் இலம்பகம் வரையில், 1883-ஆம் ண்டில் சென்னை அஷ்டலட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிற் பதிப்பித்தார்.

வேதகிரி முதலியார் (1795-1852)

தொண்டை நாட்டுக் களத்தூர் இவரூர். மகாவித்துவான் இயற்றமிழாசிரியர் இராமானுச கவிராயரிடம் கல்வி பயின்றார், கவிராயரால் நிறுவப்பட்ட தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் மதுரையில் ஒரு கனவான் நிறுவிய மதுரைக் கல்விச் சங்கத்துக்கு அழைக்கப்பட்டு அங்குச் சென்று ஏழு ஆண்டு தலைமைத் தமிழ்ப் புலமை நடத்தினார். பிறகு, உடல் நலமில்லாத காரணத்தினால், புதுச்சேரிக்கு வந்து அங்குக் கத்தோலிக்குக் கல்லூரியில் தமிழ்ப்புலவராக இருந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து ஒர் அச்சுக் கூடம் வைத்து நடத்தினார்.

சூடாமணி நிகண்டின் பதினோராவது பகுதிக்கு உரை எழுதி 1843-இல் அச்சிட்டார். திருக்குறளுக்கு உரை எழுதி 1849-இல் அச்சிட்டார். யாப்பருங்கலக் காரிகையை 1851-இல் அச்சிட்டார்.