பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

171

வேதகிரி முதலியாருடன் இலக்கண இலக்கியம் பற்றி வாதம் செய்து உதய தாரகைப் பத்திரிகையில் அவை சம்பந்தமான கட்டுரைகளை எழுதினார்.

வேதாந்த சுயஞ்சோதி, ஆத்தும போத பிரகாசிகை, நெல்லை வேலவர் உலா ஆகிய நூல்களை இயற்றினார்.

இவருடைய மாணவர்கள் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர், சம்பந்தப் புலவர், கார்த்திகேய உபாத்தியாயர், சிவசம்புப் புலவர் முதலியோர். தெய்வசிகாமணிப் பிள்ளை (1802-1846)

இவர் ஊர் திண்டுக்கல்; கிறிஸ்துவர். இன்பமணி மாலை, தோத்திரக்கும்மி முதலிய நூல்களை இயற்றினார்.

சேலம் குமாரசுவாமி முதலியார் (1803-?)

இவர் ஊர் சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர். அத்தப்ப உபாத்தியாயரிடம் கல்வி பயின்றார். சுந்தரம் ஐயர், இராமகிருட்டின ஐயர் என்பவர்களிடம் இசைக்கலை பயின்றார். கவிபாடுவதிலும் இசைப்பாட்டு இயற்றுவதிலும் வல்லவர். அரசாங்க அலுவல் செய்தவர். அதன் காரணமாகப் பல ஊர்களுக்குச் சென்றார்.

இவர் இயற்றிய நூல்கள். சுப்பிரமணியர் பதிகம், பழநி மும்மணி மாலை, தண்டாயுதபாணி கலித்துறைப் பதிகம், தண்டாயுதபாணி ஒருபா ஒருபஃது, பழநியாண்டவர் சதகம்.

கந்தபுராணக் கீர்த்தனை, சுவாமிமலை சுவாமிநாத சுவாமிபதம், சுப்பிரமணியர் வாலி, தர்ம சம்வர்த்தனி கீர்த்தனை, தண்டாயுதக்கடவுள் பஞ்சரத்தின மாலை, இரட்டை வினாயகர் கீர்த்தனை, மூலவினாயகர் கீர்த்தனை, மீனாட்சி கீர்த்தனை, சோமசுந்தரக் கடவுள் பதம், பெரியநாயகி அம்மன் கும்மி, பழநியாண்டவர் வண்ணம். இவை இவர் இயற்றிய இசைத்தமிழ்ப் பாக்கள்.

"

இவர் இயற்றிய சுந்தரபுராணக் கீர்த்தனை, கந்தபுராணம் முழுவ தையும் இசைப்பாட்டாகப் பாடப்பட்டநூல். சென்னையில், காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், அஷ்டாவதானம் சபாபதி முதலி யார் திருத்தணிகை கந்தப்பையர் முதலிய வித்துவான்கள் கூடிய பேரவையில் அரங்கேற்றப்பட்டது.