பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சுவாமிகள் சரித்திரம், சிதம்பர சுவாமிகள் பத்திற்றுப்பத்தந்தாதி, திருத்தணிகை இரட்டை மணிமாலை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் பதிற்றுப்பத்தந்தாதி, மேற்படி தோத்திரச் சந்தமாலை, பழனி வெண்பாமாலை, அருணை வெண்பாமாலை, மயிலை வெண்பா மாலை, காஞ்சி குமரகோட்டக் கலம்பகம், சென்னைக் மேற்படி கந்தசுவாமி வெண்பாமாலை, மேற்படி கந்தசுவாமி புராணம் ஆகிய நூல்களையும் இயற்றினார். இவர் இயற்றிய உரைகள்: திருப்போரூர் புராண வசனம், திருத்தணிகையாற்றுப்படை உரை சந்தரனுபூதி விருத்தியுரை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உரை.

கால்ட்வெல் ஐயர் 7(1814–1891)

வரைக் கால்வேல் ஐயர் என்றும் கூறுவர். அயர்லாந்து தேசத்தில் பிறந்தவர். சமயத்தொண்டு செய்வதற்காக 1838-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். 1841, இல் குரு பட்டம் பெற்றார். திருநெல்வேலியில் இடையன் குடி என்னும் ஊரில் தங்கி ஐம்பது ஆண்டு கிறிஸ்துசமயத் தொண்டு செய்தார். பெருந்தொகையான இந்துக்களைக் கிறிஸ்துவ சமயத்தில் சேர்த்தார். 1877-இல் திருநெல்வேலி பிஷப்பாகப் பட்டம் சூட்டப்பட்டார். பிறகு தள்ளாமையினால் 1891-ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள் உத்தியோகத்திலிருந்து நீங்கிக் கோடைக்கானலில் வசித்துவந்தார். அங்கு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள் காலமானார்.

கால்ட்வெல் ஐயர் இராயல் ஏஷியாடிக் சங்கத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அங்கத்தினராக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளையும் கற்றவர். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’8 என்னும் மொழி ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இதில் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகள் ஒரினத்தைச் சேர்ந்தவை என்பதையும் அவற்றிற்குள்ள ஒற்றுமை களையும் விளக்கி எழுதியிருக்கிறார். தமிழ் முதலிய திராவிட மொழிகள் ஒரினத்தைச் சேர்ந்தவை என்பதை முதன் முதலில் உலகம் அறியச் சொன்னவர் இவரே. இவருடைய நூலினாலே இவருடைய புகழ் மேல் நாடுகளிலும் கீழ் நாடுகளிலும் பரவியது. திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூலையும் இவர் ஆங்கிலமொழியில் எழுதியிருக்கிறார்.