பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

மகாவித்துவான் அவர்கள் பதினாறு தல புராணங்களையும், பதினாறு அந்தாதிகளையும், பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்களையும், அநேக பிரபந்த நூல்களையும் இயற்றினார்கள். திருவானைக்கா அகிலாண்டம்மை பிள்ளைத்தமிழ். திருத்தவத்துறை பெருந்தவப் பிராட்டி பிள்ளைத் தமிழ், பெருமணநல்லூர்த் திருநீற்றம்மை பிள்ளைத் தமிழ், திருவுறந்தை காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ். கன்னபுரம் பாகம்பிரியாளம்மைப் பிள்ளைத்தமிழ், திருவெண் காட்டுப் பெரிய நாயகிம்மை பிள்ளைத் தமிழ், திருவிடைக் கழி முருகர் பிள்ளைத் தமிழ், திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார்.

வாட்போக்கிக் கலம்பகம், துறைசைக் கலம்பகம், காழிக் கோவை, திருவிடை மருதூர் உலா, தில்லையமக அந்தாதி, திருத் துறைசை யமக வந்தாதி, திருச்சிராப்பள்ளிய மகவந்தாதி, திருக் குடத்தை திரிபந்தாதி, திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி, திருவிடை மருதூர் திரிபந்தாதி, திருவானைக்காத் திரிபந்தாதி, பட்டீச்சுரப் பதிற்றுப்பத்தந்தாதி, பூவளூர்ப் பத்திற்றுப்பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி, திருவூறைப் பத்திற்றுப்பத்தந்தாதி. தண்டபாணி பத்திற்றுப்பத்தந்தாதி எறும்பீச்சரம் வெண்பாவந்தாதி, திருக்கலைசை மாலை, திருவானைக்கா மாலை, திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மாலை, மருமைச் சச்சிதானந்த தேசிகர் மாலை, திருஞானசம்பந்தர் ஆனந்தக் களிப்பு முதலிய பிரபந்த நூல்களையும் இயற்றினார்.

திருவுறந்தைப் புராணம், திருகுடந்தைப் புராணம். மாயூரப் புராணம், திருச்செந்திற் புராணம், திருக்குறுக்கை வீரட்டப் புராணம், திருவாளொளிப்புத்தூர்ப் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், விளர்த் தொட்டிப் புராணம், ஆற்றூர்ப் புராணம், திருவாரூர்த் தியாகராசர்லீலை, தனியூர்ப்புராணம், மண்ணிக்கடிக்கரை புராணம், கோயிலூர் புராணம், கண்டதேவிப் புராணம், காரைக்குடிப் புராணம், வீரைவனப் புராணம், திருமயிலைப் புராணம், காசி ரகசியம், திருவம்பர்ப்புராணம், திருப்பெருந்துறைப் புராணம் முதலிய புராணங்களை இயற்றினார். பதிகங்களும் தனிப்பாடல்களும் பற்பல இயற்றினார்.