பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சதாசிவம் பிள்ளை (1820-1896)

அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்றும் J. R. Arnold என்றும் கூறப்படுவார். யாழ்பாணத்து மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்தவர். கிறிஸ்து சமயத்தவர். 'உதயதாரகை' பத்திரிகையை நடத்தினார்.

இவர் எழுதிய நூல்கள்: சாதாரண இதிகாசம். இந்து தேச சரித்திரநூல். (1858 வானசாஸ்திரம் 1861). பாவலர் சரித்திர தீபகம் (1886), இல்லற நொண்டி (செய்யுள் நூல் 1887). வெல்லையந்தாதி, கீர்த்தனா சங்கிரகம் (கிறிஸ்து சமயநூல்கள் 1890), மெய்வேதசாரம், திருச்சதகம், நன்னெறிமாலை, நன்னெறிக் கொத்து, சற்போத சரணம். உரிச்சொல் நிகண்டை 1889-இல் அச்சிட்டார்.

9

போப்பையர் (1820-1903)

இவர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். ஆங்கிலேயர், ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் என்னும் மொழிகளைக் கற்றவர். இவர் வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டில் சமயத்தொண்டு செய்தவர். இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயரிடத்திலும், ஆரியங்காவுப் பிள்ளையிடத்திலும் தமிழ் பயின்றார். செய்யுட்களைத் தொகுத்துத் 'தமிழ்ச்செய்யுட் கலம்பகம்' என்னும் பெயருடன் 1859– இல் அச்சிட்டார். தமிழ் இலக்கண வினாவிடையை 1895-இல் எழுதினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1886-இல் வெளியிட்டார். நாலடியாரை ஆங்கிலத்தில் மொழியெர்த்தார் (1893). மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1897-இல் அச்சிட்டார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு இவற்றிலுள்ள வீரச்சுவை யுள்ள செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (1899). ஆங்கிலேயர் தமிழ் கற்பதற்காகச் சில நூல்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1823-1879)

யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் இவ்விருவரிடத்திலும் தமிழ் பயின்றார். பீற்றர் வெர்ஸிவல் ஐயர் விருப்பப்படி தமிழ் விவிலிய நூலைப் பிழை தீர்த்து வெளியிட்டார். இவர் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டார சன்னதிகளால் நாவலர் பட்டம் அளிக்கப் பட்டார். யாழ்ப்பாணத்து வண்ணார்