பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

பத்தொன்பதாம் நூற்றாண்டு

181

பண்ணையிலும் சிதம்பரத்திலும் சைவ சமயத்தையும் தமிழ் மொழியையும் கற்பிக்கும்பொருட்டுப் பாடசாலைகளை ஏற்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'உதய தாரகை' 'இலங்கை நேசன்' பத்திரிகைகளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதினார். யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சியந்திரசாலைகள் அமைத்து அவற்றின் வாயிலாகப் பல நூல்களை அச்சிட்டு வெளிப் படுத்தினார். பெரியபுராண வசனம். திருவிளையாடற் புராண வசனம், கந்தபுராண வசனம். பாலபாடம் (நான்கு பாகங்கள்), சைவ வினா விடை (இரண்டு பாகம்), இலக்கணச் சுருக்கம், இலங்கைப் பூமி சாஸ்திரம், சிதம்பரமான்மிய வசனம் ஆகிய நூல்களை இயற்றினார்.

கோயிற்புராணம், நன்னூல், சைவ சமயநெறி, வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முதலிய நூல்களுக்கு உரை எழுதினார்.

(இவருடைய வரலாற்றினை, த. கைலாச பிள்ளையவர்கள், ‘ஆறுமுகநாவலர் சரித்திரம்' என்னும் பெயருடன் எழுதியிருக் கிறார்கள். அருணாசலக் கவிராயர் 'ஆறுமுகநாவலர் புராணம்’ என்னும் பெயருள்ள நூலை எழுதியிருக்கிறார்.)

இராமலிங்க சுவாமிகள் (1823-1874)

கருங்குழி இராமலிங்கம்பிள்ளை என்னும் பெயருடன் இவர் சென்னையில் இருந்தபோது, மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தில் கல்வி பயின்றார், இவருடைய தமையன்மாராகிய சிதம்பரம் சபாபதிபிள்ளை பரசுராமப்பிள்ளை என்பவர்களும் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்றவர்கள். இராமலிங்கர், இளமைப் பருவத்தில் தமது தமையன்மார் புராணம் பிரசங்கம் செய்யும்போது அவர்களுக்குக் கையேடு வாசித்து வந்தார். துறவு பூண்ட பிறகு திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயர் பெற்றார். முருகதாசர் என்னும் தண்டபாணி சுவாமிகள் இவருடைய நண்பர். தொழுவூர் வேதாயுத முதலியார் இவருடைய மாணவர். உத்தரஞான சிதம்பரம் என்னும் ஞான சபையை நிறுவினார்.

இவர் இயற்றிய நூல்கள்: மனுமுறைகண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம், சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவ மாலை, இங்கிதமாலை முதலியன, இவருடைய பாடல்கள் இனிமையும், எளிமையும் உள்ளவை. இவருடைய பாடல்கள்