பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சரவணப்பொருமாள் கவிராயர் (?-1886)

துவாத்ரீம் சதாவதானம் சரவணப்பொருமாள் கவிராயர் என்றும், சிறிய சரவணப்பொருமாள் கவிராயா என்றும் கூறப்படுவார். இவருடைய பாட்டனார் அட்டாவதானம். பெரிய சரவணக் கவிராயர். இவருடைய தகப்பனார். அருணாசலக் கவிராயர். பாண்டிநாட்டுப் பரம்பக் குடிக்கு அடுத்த முதுகுளத்தூர் இவருடைய ஊர்.

இவர், இராமநாதபுரம் சேதுபதிசமஸ்தான வித்வான் சேதுபதி அரசரிடம் பல்லக்கு முதலிய வரிசைகளைப் பெற்றவர். சாதாவதானம் செய்து புகழ் பெற்றவர். இவர் இயற்றிய நூல்களாவன:- மதுரைச் சிலேடை வெண்பா, குன்றைச் சிலேடை வெண்பா, திருச்சுழியில் ஒரெழுத்தந்தாதி, கழுகுமலை ஓரெழுத்தந்தாதி, மகரவந்தாதி, பனசைத் திரிபந்தாதி, கயற்கண்ணிமாலை, மதுரை யமகவந்தாதி, புவனேந்திரன் அம்மானை, கந்த வருக்கச் சந்த வெண்பா முதலியன.

கோவிந்தப் பிள்ளை (?–1890)

இவர் ஊர் திரிசிரபுரம். வித்துவ ஜனசேகரர் கோவிந்தப்பிள்ளை என்று இவர் கூறப்படுவார். வைணவ சமயத்தவர். சில காலம் சென்னையிலும் வசித்தார். திரிசிரபுரத்தில் மலைக்கோட்டையில் மௌனசுவாமி மடத்தில் இருந்த வேலாயுத முனிவரிடத்தில் தமிழ் பயின்றார். இவருடன் மேற்படி முனிவரிடம் கல்வி பயின்றவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். கோவிந்தப் பிள்ளையவர்கள் மிகுந்த குருபக்தியுள்ளவர். தாம் எழுதுங் கடிதங்களின் தலைப்பில் “வேலாயுத முனிவர் பாதாரவிந்தமே கதி” என்று எழுதுவது வழக்கமாம். இவர் சிறந்த தமிழறிஞராக

விளங்கினார்.

இராசமன்னார் கோயில் தலபுராணம், மேற்படி கோயில் அலங்காரக் கோவை என்னும் நூல்களைச் செய்யுளாக, இயற்றினார். கம்ப ராமயாண சுந்தர காண்டத்துக்கும் சடகோபரந்தாதி முதலிய நூல்களுக்கும் உரை எழுதினார். கம்ப ராமாயணம் முழுவதையும் அச்சிற் பதிப்பித்தார்.

இராமலிங்கத் தம்பிரான் (?-1893)

திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான்களில் ஒருவர். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சிரிசிரபுரம் தியாகராய செட்டியார் இவர்கள் காலத்தில் இருந்தவர். செய்யுள் இயற்ற வல்லவர்.