பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பொன்னம்பல சுவாமிகள் (1832-1904)

இவரது தந்தையார் ஊர் இராமநாதபுரத்து அநுமந்த குடி. இவர் விஜயநகரத்தில் பிறந்தவர். பதினாறாவது வயதில் சிதம்பரம் சென்று கோவிலில் திருத்தொண்டு செய்துவந்தார். அக் காலத்தில் பெத்தாச்சி சுவாமிகள் என்னும் துறவியிடம் துறவு பெற்றார். பிறகு. கோவலூருக் குச் சென்று முத்துராமலிங்க சுவாமிகளின் மரணவராகிய சிதம்பர சுவாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தம் ஆசிரியரின் கட்டளைப்படி காசிக்குச் சென்று இந்தி மொழியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார். மீண்டும் கோவலூருக்கு வந்து ஆசிரியருடன் தங்கியிருந்தார். ஆசிரியர் காலமான பிறகு சிதம்பரம் சென்று அங்குக் கோவலூர் சிதம்பர மடம் என்னும் மடத்தை நிறுவி அதில் வசித்து வந்தார்.

இவர், பொன்னம்பல சுவாமிகள் இயற்றிய நூல்களை அச்சிட்டார். சில நூல்களுக்கு உரை எழுதியிருக்கிறார். கிருஷ்ணமி சிரர் இயற்றிய பிரபோத சந்திரோதயம் என்றும் மெய்ஞ்ஞான விளக்கம் என்றும் பெயருள்ள நூலை 1889-இல் அச்சிட்டார். பஞ்சதசி, பாடுதுறை முதலிய நூல்களையும் அச்சிற் பதிப்பித்தார். விசார சாகரம் என்னும் நூலை இந்தி மொழியிலிருந்து தமிழில் வசனமாக மொழி பெயர்த்தார். கைவல்லிய நவநீதம் என்னும் நூலுக்குத் தத்துவார்த்த தீபம் என்னும் உரை எழுதி 1898-இல் அச்சிற் பதிப்பித்தார். வேதாந்த சூடாமணி பகவத்கீதை என்னும் நூல்களுக்கு உரை எழுதினார்.

நெல்லையப்ப பிள்ளை (1832-1905)

இவர் ஊர் திருநெல்வேலி. நெல்லையப்பக் கவிராயர், மு. ரா. அருணாசலக் கவிராயர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், கல்போத்து பிச்சுவையர், மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர், திருச்செந்தூர்க் குஞ்சி ஐய பாரதி, விக்கிரம சிங்கபுரம் அனந்தகிருட்டிண கவிராயர் முதலியவர்களிடம் இவர் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: சந்திவிநாயகர் பதிகம், சுப்பிரமணியர் தோத்திரம், சுப்ரிமணியர் பதிகம், பழனியாண்டவர் தோத்திரம், சோமசுந்தரேசர் பதிகம், சுதர்ம சார சங்கிரகம் வசன நூல்), கால்நடை மருத்துவ நூல் (வசனம்).