பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

191

ஆத்திப்பட்டிச் சங்கிலி வீரப்ப பாண்டிய வன்னியனார்மீது பள்ளு, புரவிபாளையம் பெருநிலக்கீழார்மீது விசயக்கும்மி, கருங்காலக் குடி காதல், குறவஞ்சி, கும்மிப்பதம், இசைப்பாடல்கள் முதலியன. அரங்கநாத முதலியார் (1837-1893)

ராய்பகதூர், பூண்டி அரங்கநாத முதலியார் என்பது இவர் பெயர். சென்னை மாகாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர். கணிதத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லவர். கம்ப இராமா யணத்தையும் திருவிளையாடற் புராணத்தையும் மனப்படாமாக ஒப்பிப்பார். 1880-இல் அரசாங்க மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப் பட்டார். 1892-இல் சென்னை நகர ஷெரீப்பாக நியமிக்கப் பட்டார். கச்சிக் கலம்பகம் என்னும் செய்யுள் நூலை இயற்றி 1889-இல் சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பாடசாலையில் அரங்கேற்றினார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு இவர் பலவகையில் உதவி செய்தார். இவருடைய உருவச்சிலை சென்னை மாகாணக் கல்லூரியில் இருக்கிறது.

சபாபதி முதலியார் (1837-1898)

மகாவித்துவான் சு. சபாபதி முதலியார் என்பது இவர் பெயர். இவர் ஊர் மதுரை. தமிழ் வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி களைக் கற்றவர். கணித நூல் வல்லவர். மதுரைக் கலாசாலையில் தமிழ் ஆசிரியராக இருந்து 1880-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். பரிதிமாற் கலைஞன் என்னும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களில் ஒருவர்.

இவர் இயற்றிய நூல்கள். திருப்பரங்கிரிக் குமரன் அந்தாதி, திருக்குளத்தை வடிவேலன் பிள்ளைத் தமிழ், மதுரைமாலை முதலியன. குளந்தை என்பது மதுரையைச் சேர்ந்த பெரிய குளம். இவ்வூரார் வேண்டு கோளின்படி குளந்தை வடிவேலன் பிள்ளைத் தமிழை 1863-இல் இயற்றினார். இந்நூல் 1896-இல் அச்சிடப்பட்டது.

இவர் காலஞ்சென்றபோது இவருடைய மாணாக்கராகிய பரிதிமாற்கலைஞன் அவர்கள் கூறிய இரங்கற்பாக்கள் இவை: சரபம், சரபகவி வித்துவான் என்னும் சிறப்புப் பெயர்களை யுடையவர்.

இவர் இயற்றிய நூல்கள்: தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், நான்கு நூல், திருமகளந்தாதி, ஏகபாதத்திகழகலந்தாதி, தெய்வத்திருவாயிரம், பழநித்திருவாயிரம்,