பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

195

சேதுபதி மன்னர் இவருக்கு “வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம்” என்னும் பெயரைச் சூட்டினார்.

இவர் இயற்றிய நூல்கள்: அசம் பிரதிய நிரசனம், அஞ்ஞான திமிரபாஸ்கரம், அர்ச்சா தீபம், ஆசாரியப் பிரபாவம், ஆஞ்சநேய ராம வைபவ பங்கம், ஆதி சைவப் பிரபாவம், ஆபாச ஞான நிரோதம், இராம தத்தவ தீபிகையினது ஆபாச விளக்கம், இராமநுஜ மத சபேடிகை, உத்தமவாத தூலவாதூலம், கங்காதரணப் பிரக்யரம், கீதார்த்த தீபிகாபாச நிரசனம், குதர்க்கவாத விபஞ்சினி, கூரேசவிஜய பங்கம், சமரச ஞான தீபம், சன்மார்க்க போத வெண்பா, சித்தாந்த சேகரம், சித்தாந்த பூஷணம், சிவகிரி பதிற்றுப் பத்தாந்தாதி, சிவதத்துவ சிந்தாமணி, சிவநாமாவளி, (இரண்டு பாகங்கள்), சைவ சூளாமணி, ஞான சதுஷ்டய தர்ப்பணம், ஞான சம்பந்தர் பரத்வ நிரூபணம், ஞான பேதத் துணிவு, ஞானபேதத் தெளிவு, ஞானபேத விளக்கம், ஞானபேத விளக்க நியாயாரத ரக்ஷாமணி, பாரத தத்துவப் பிரகாசிகை, பாரதாத்பரிய சங்கிரகம், பிரஹ்மதத்துவ நிரூபணம், பிரமாநுபூதி, மூர்க்கவாத விபஞ்சிநி, மெய்கண்ட சிவ தூஷணநிக்ரகம், வேதபாஹ்ய சமாஜ கண்டனம் முதலியன.

சுப்பிரமணிய பிள்ளை (1846-1909)

இவரூர் செங்கற்பட்டு. அரசாங்க அலுவலில் இருந்தவர். திருப்புகழ் ஏடுகளைத் தேடி மூன்று பகுதியகளாக அச்சிட்டார். பிரமோத்தர காண்டத்தை வசன நடையில் எழுதி 1879-இல் அச்சிற் பதிப்பித்தார். திருத்தருப்பூண்டி, மானாமதுரை, திருநீடூர் என்னும் ஊர்களின் தல புராணங்களை வசனமாக எழுதி வெளியிட்டார். சிவஸ்தல மஞ்சரி என்னும் நூலை எழுதினார்.

6

கணேச பண்டிதர் (1849-1901)

ஊர்.

யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை இவருடைய வடமொழி தென்மொழி இரண்டையும் கற்றவர். திருவண்ணாமலை ஆதீனத்து வித்துவான். பாண்டிநாட்டு இளையான் இளையான் குடியில் இருந்தபோது அவ்வூர் வணிகர் விரும்பியபடி அவ்வூர்த் தல புராணத்தை ளைசைப் புராணம் என்னும் பெயருடன் விருத்தயாப்பில் பாடினார்.

99