பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

கவிராயர், கந்தசாமிக்

கவிராயர்

என்பவர்களின்

197

சகோதரர்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் சின்னபட்டத்தில் இருந்த நமசிவாய தேசிகரிடம் கல்வி பயின்றார்.

திருநெல்வேலி கவிராய நெல்லையப்பபிள்ளை, அழகிய சொக்கநாதபிள்ளை, சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், குன்னூர்க் குமாரசாமிமுதலியார், சோழவந்தான் அரசன் சண்முகனார். வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் ஆகிய புலவர்கள் இவரு டைய நண்பர்கள்.

திருப்பரங்கிரிப் புராண வசனத்தை எழுதி 1899-இல் அச்சிட்டார். திருப்பரங்கிரிப் பிள்ளைத் தமிழையும் அதே ஆண்டில் அச்சிட்டார். திருச்செந்தூர்த் தலபுராண வசனத்தை எழுதி அதே ஆண்டில் அச்சிட்டார். பகழிக் கூத்தர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழையும் அச்சிட்டார். திருக்குற்றாலப் புராணத்தை உரைநடையில் எழுதினார். சிவகாசிப் புராணம், குறுக்குத் துறைச் சிலேடை வெண்பா, ஆறுமுகநாவலர் சரித்திரம் (செய்யுள்), சிவகாசிக் கலிவிருத்த அந்தாதி, சிவகாசி வெண்பா வந்தாதி, (மூலமும் உரையும்) இயற்றினார். புதிய நூல்களை இயற்றியதோடு பழைய நூல்களை அச்சிற் பதிப்பித்தார். இராமசுவாமி ராசு (1852–1897)

இவர் ஊர் திண்டிவனம். சென்னையில் கல்வி கற்றார். தமிழ் தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் என்னும் நான்கு மொழிகளைக் கற்றவர். சில காலம் ஆங்கில ஆசிரியராகவும், சென்னைத் துறைமுகச் சுங்க அலுவலகத்திலும் வேலை செய்தார். பாரிஸ்டர் படிப்புக்காக 1882- இல் லண்டன்மா நகரஞ் சென்றார். 1885-இல் சென்னையில் பாரிஸ்டர் தொழில் நடத்தினார். 1877-இல் பிரதாப சந்திர விலாசம் என்னும் நாடகநூலை எழுதினார். தீயவர்களின் வஞ்சனைகளுக்கு ஆளாகி நெறி தவறி யொழுகும் இளைஞர்களுக்கு நல்லறிவு புகட்டு வதற்காக இந்நூல் இயற்றப்பட்டது. ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவது போல இந்நூலில் சில செய்யுட்களை அமைத்திருக்கிறார். அவை இவை:

மைடியர் பிரதரே எங்கள் மதருக்குக் கூந்தல் நீளம் ஐடிலா யவளுந் தூங்க அறுத்ததை விற்று நானும் ஸைடிலோர் லேடியாகச் சட்காவில் ஏறிக்கொண்டே ஒய்டான ரோட்டின்மீதில் உல்லாச மாகப் போனேன்'