பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

காப்பியங்களையும் சங்க நூல்களையும் படித்து ஆராய்ச்சி செய்தலும் கூடுமானால் அவற்றை அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தலும் உத்தமமென்று கூறித் தம்பாலிருந்த சீவக சிந்தாமணி முதலியவற்றின் கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து அடிக்கடி ஊக்கமளித்து வந்தார்கள். அவர்களையும், தம்முடைய மரண பரியந்தம் அவர் களைப் போலவே என்னை ஆதரித்து பாராட்டி ஊக்கமளித்து வந்த ஸ்ரீமான் பூண்டி அரங்கநாத முதலியாரவர்களையும் என்னுடைய உள்ளம் ஒரு போதும் மறவாதென்பதை இங்கே தெரிவியாமலிருக்க முடியவில்லை.'

மேலும், ஐயர் அவர்கள் “என் சரித்திரம்” என்னும் தமது வரலாற்றில் சேலம் இராமசுவாமி முதலியாரவர்களைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

“1892-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இரண்டாம் தேதி அவர் (சேலம் இராமசுவாமி முதலியார்) உலக வாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டுத் துடித்துப் போனேன். அவருடைய

பழக்கம் எனக் கு ஏற்பட்டதையும் அதனால் பழந்தமிழ்

நூலாராய்ச்சியிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இல்லாவிட்டால் சிந்தாமணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?"

1892-ஆம் ஆண்டிலே தமது நாற்பதாவது வயதிலே சேலம் இராமசாமி முதலியாரவர்கள் காலமானார். அவர் மீது டாக்டர் சாமிநாதையர் கூறிய இரங்கற்பா இவை:

66

“என்புடையா ரன்புடைய இராமசா மிக்குரிசில்

உன்புடையார் நயசுகுணம் ஒவ்வொன்றை யுன்னி யுன்னி அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி காணாசாய்த் துன்புடையா ராகிமனஞ் சோர்ந்திரடவெங்க கன்றனையே!

இன்தேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய்வைரக் குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய் குன்றத்துள் ஒன்றேனும் உனையணுக ஒண்ணாதோ சார்ந்திருப்பின் என்றேனும் நிற்பிரிதல் எம்மை வருத்திடுமோ.

ஆர்க்குழைப்பான் போனானென் றுலைவாரும் போனாளில் ஆர்க்குழைப்பா னென்று பதைப்பாருந் தமிழெனுமுந்