பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

Kalavali or the Battle field (vol. xviii 1889 pp. 258-265.)

The Kalingathu Parani (vol. xix. 1890, pp. 329-345.)

The Vikrama Cholan Ula (vol. xxii, 1893, pp. 141-150.)

The Conquest of Bengal and Burma by the Tamils; Raja Raja Chola என்னும் சிறு நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதினார்.

நாராயண ஐயர் (1857-1914)

பாண்டி நாட்டு மானாமதுரை இவருடைய ஊர். மதுரையிலும் சென்னையிலும் கல்வி கற்றார். 1883 முதல் மதுரையில் வழக்கறிஞ ராகத் தொழில் செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு டையவர், பதஞ்சலி யோக சூத்திரத்தை வட மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தார். சநாதனதர்மம், இந்துமத்தூடணையின் பரிகாரம். ஒழுக்கமுறை நூல், சன்மார்க்க தீபம் முதலிய நூல்களை எழுதியிருக்கிறார். “பூர்ண சந்திரோதயம்" என்னும் பத்திரிகையை நடத்தினார்.

சிற். கைலாசப் பிள்ளை (1857-1916)

இவரது ஊர் யாழ்ப்பாணத்து நல்லூர், இளமையில் நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடம் கல்வி பயின்றார். பின்னர், சென்ட் ஜோன்ஸ் காலேஜில் கல்வி பயின்றார். சி. வை. தாமோதரம் பிள்ளை, சர். பொன் இராமநாதர், சர் பொன் அருணாசலம், தொழுவூர் வேலாயுத முதலியார், அஷ்டாவதானம் சபாபதி நாவலர், டாக்டர் சாமிநாதைய்யர் முதலியவர்களிடம் நட்பு முறையில் பழகினவர். திருவாவடுதுறை ஆதீனத்துச் சுப்பிரமணிய தேசிகரால் வித்துவான் பட்டம் வழங்கப் பெற்றார். இலங்கை உயர்தர நீதி மன்றத்தில் துவிபாஷகராகவும், பின்பு யாழ்ப்பாணக்கச்சேரிப் பிரதம முதலியாராகவும், மட்டக்களப்புக் கச்சேரி முதலியாராகவும் ஈற்றில் தேசாதிபதியின் தமிழ் முதலியா ராகவும் உத்தியோகம் செய்தவர்.

இவர் சில தனிச் செய்யுட்களை இயற்றினார். வட திருமுல்லை வாயில் மும்மணிக் கோவையைப் பாடினார்.

பீமகவிப் புலவர் (1858-?)

பாண்டிநாட்டுக் குன்றக்குடிக்கு அடுத்த செந்நெற்குடி இவர் ஊர். திருவாவடுதுறை நமச்சிவாய தேசிகரிடத்தில் இலக்கண இலக்கியம்