பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவையுரை, மச்ச புராணம், கண்ணுடைய வள்ளலார் இயற்றிய மாயாப் பிரலாபம், சிவவாக்கியர் பாடல் முதலிய பழைய நூல்களை அச்சிற்பதிப்பித்தார். “வித்தியா விநோதினி” என்னும் வெளியீட்டை (1889-1892), இராமசாமி நாயுடு, வாசுதேவ முதலியார் இவர்களுடன் சேர்ந்து வெளியிட்டார்.

(இந் நூலாசிரியரின் தமயனாரான மயிலை சீனி. கோவிந்த ராசனாரும், கா. நமச்சிவாய முதலியாரும் மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்ற மாணவர்கள்.)

பண்டித நடேச சாஸ்திரி (1859-1906)

இவர் கும்பகோணம் கல்லூரியில் கல்வி பயின்றார். இந்திய சாசன ஆராய்ச்சி இலாகாவில் அலுவல்செய்தார். பிறகு வேறு அரசாங்க இலாக்காக்களிலும் அலுவல் செய்தார். ஆங்கிலத்திலும் வட மொழியிலும் சில நூல்களை எழுதினார். தமிழில் சில கதைகளை எழுதினார். அவையாவன:

திராவிட பூர்வகாலக் கதைகள் (1836), திராவிட மத்தியகாலக் கதைகள் (1886) மாமி கொலுவிருக்கை (1903), முத்திரா ராக்ஷசம் (விசாக தத்தை என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு 1885) தன்னு யிரைப்போல மன்னுயிரை நினை (ஷேக்ஸ்பியரின் Measure for Measure என்னும் கதை 1893), வயேலா சரித்திரம் (ஷேக்ஸ்பியரின் Twelfth Night or what you will என்னும் கதை, 1892) கோமளம் குமரியானது (1902). திக்கற்ற இரு குழந்தைகள் (1902), மதிகெட்ட மனைவி (1903)

இலக்கண முத்தையா (1861-1912)

கோவில்பட்டி தாலூகா பொம்மையபுரம் இவரூர் சோழவந்தான். கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் இலக்கண இலக்கியங் களைக் கற்றார். சுங்குரும்பையந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றினார்.

நாராயணசாமி ஐயர் (1862-1914)

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலூகா பின்னத்தூரில் பிறந்தவர். மன்னார்குடிப் பாடசாலையில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றார். அவர் மூலமாகத் தமிழ் நூல்களைப் படிப்பதில் பேரவாக் கொண்டார். பின்னர், வேதாரணியத்