பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

திருவாமாத்தூர் அழகியநாதர் பஞ்சரத்தினம், சென்னை கந்தசுவாமிப் பதிகம், திருவானைக்கா அகிலாண்ட நாயகி அந்தாதி, திருமுல்லை வாயில் கொடியிடை நாயகி அந்தாதி, திருமயிலைக் கற்பகவல்லி அந்தாதி, திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி மாலை. பழநிச் சந்நிதிமுறை, பழநிச் சிங்காரமாலை, பூவைச் சிங்காரச் சதகம், குன்றத்தூர் பொன்னி யம்மன் பதிகம், புதுவைக் காமாட்சியம்மன் பதிகம் மனோன்மணியம் என்னும் வைத்திய நூல்.

கருப்பையா பாவலர் (1864-1907)

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி இவருடைய ஊர். சென்னைக்குச் சென்றிருந்த போது, அங்குக் க.வ. திருவேங்கட நாயுடு என்பவர் செய்த சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த இவர் அவரைப் பாராட்டி இவ்வாறு கூறினார். “திருவேங்கட நாயுடவர்கள் செய்துவரும் பிரசங்கத்தை மகிழ்ந்தெவருங் கேட்கில் அன்பும் அருளுங்கொண்டு ஆனந்தமாகப் பகவன் பதத்தைச் சார்ந்து வாழ்வார்." சாதாரணப் பேச்சுப் போல இருக்கிற இது, வெண்பாவாகவும் அமைகிறது. அமைத்துப் பாருங்கள்.

66

“திருவேங் கடநா யுடவர்கள் செய்து

வரும்பிரசங் கத்தை மகிழ்ந்தெ-வருங்கேட்கில் அன்பும் அருளுங்கொண் டாநந்த மாகப்பக வன்பதத்தைச் சார்ந்து வாழ்வார்".

இவர் இயற்றிய நூல்கள். அழகர் பதிகம், இலக்குமி யந்தாதி, பாங்கிரி மாலை, நவரத்தினம், திருப்போரூர் ஆண்டவர் திரிபத்தாதி, கட்டளைக் கலிப்பா, திருப்பல்லாண்டு, சிதம்பரசுவாமி கலாமாலை, வண்ணங்கள், திருக்கோட்டியூர் திரிபந்தாதி, திருச்செந்தில் திரிபந்தாதி,

ரழுத்தந்தாதி, திருக்குரம்பைத் திரிபந்தாதி, திருமெய்யம் ரெழுத்தந்தாதி, மருதூர் நாகநாதர் மாலை, திருஞான சம்பந்தர் மாலை, வடமுல்லை வாயில் மாசிலாமணி சரித்திரம், மயிலைச் செந்தில்வேல் முதலியார் ஐந்திணைக் கோவை, பதிகங்கள் முறையூர் மீனாட்சி சுந்தரேசுவரர் பிரபந்தத் திரட்டு.